மேலும் அறிய

TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி

TN Election 2026: தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலேயே பரப்புரையில் சுணக்கம் காட்டும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சூடான வாக்குறுதிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

TN Election 2026: தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியிலேயே போட்டியிடும் பாமகவின் திலகபாமா, பிரத்யேகமாக சில வாக்குறுகளை வெளியிட்டுள்ளார்.

பெரம்பூர் தொகுதி - சுணக்கம் காட்டும் விஜய்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என பல நட்சத்திர தொகுதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் தாண்டி கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த நாளன்றே பெரம்பூரில் பரப்புரை மேற்கொண்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால், அதன் பிறகு அந்த தொகுதி பக்கமே அவர் சென்றதாக செல்லவில்லை. கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இல்லாத நிலையில், நிர்வாகிகளின் களப்பணி எப்படி இருக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

விஜயை ஓவர்டேக் செய்யும் திலகபாமா..

விஜய் மட்டுமின்றி, ஆளுங்கட்சி சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏவான ஆர்.டி. சேகரை எதிர்த்து, அதிமுக கூட்டணி சார்பில் பாமக பொருளாளரான திலகபாமா பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஏற்கனவே அன்புமணி அங்கு பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து வீதி வீதியாக சென்று தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணிகளை தொடங்கியுள்ள திலகபாமா,  ”என் மக்கள் என் வாக்குறுதிகள் - 25” என்ற பட்டியலை  வெளியிட்டுள்ளார். அதில் பெரம்பூர் தொகுதிகளுக்கு என சில பிரத்யேகமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

பெரம்பூர் பிரச்னைகளுக்கு தீர்வு?

திலகபாமா வெளியிட்டுள்ள பட்டியலில், “பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை, பெரம்பூரின் பெரும் சாபக்கேடாக இருக்கும் கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் அகற்ற முக்கியத்துவம், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், கழிவுநீர் கலப்பதைத் தவிர்க்கவும் தனி கால்வாய் திட்டங்கள்,  24 மணி நேர அரசு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மெட்ரோ மினி பஸ் இணைப்பு வசதி உள்ளிட்ட 10 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அடித்தட்டு மற்றும் சாமானிய மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கான தீர்வுகளாக திலகபாமா கொடுத்துள்ள வாக்குறுதிகள் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

விஜய் வேகமெடுப்பாரா?

வலுவான கட்டமைப்பு கொண்ட அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளின் வேகத்தை உணர்ந்து இனியாவது, தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டினால் மட்டுமே விஜயின் சட்டமன்ற கனவு என்பது பலிக்கும். இல்லையெனில் அரசியல் கட்சி தொடங்கிய பத்தோடு பதினோறாவது நடிகராகவே விஜயும் மாறிவிடுவார். எனவே, எதிர்வரும் நாட்களில் விஜய் கள அரசியலில் தீவிரம் காட்டுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget