மேலும் அறிய

மயிலாடுதுறையில் ‘கை’ நழுவுகிறதா கோட்டை? - திமுக vs காங்கிரஸ்: ‘மல்லுக்கட்டும்’ கூட்டணிக் கட்சிகள்!

ஒரு நபருக்கு ஒரு பதவி" என்ற அடிப்படையில், மயிலாடுதுறை தொகுதிப் போட்டியிட வாய்ப்பு பெற தனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜகுமார் விட்டுக்கொடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான மயிலாடுதுறையில் ஆளுங்கட்சியான திமுக-விற்கும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் ‘மல்யுத்தம்’ தொடங்கிவிட்டது.

திமுகவின் ‘கிட்டப்பா’ கோட்டை முதல் காங்கிரஸ் ஆதிக்கம் வரை!

மயிலாடுதுறை தொகுதியின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இது திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் சரிசமமான பலப்பரீட்சைக் களமாகவே இருந்து வந்துள்ளது. 1967 முதல் 1984 வரை திமுகவின் மூத்த தலைவர் கிட்டப்பா அவர்கள் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று சாதனை படைத்த மண் இது. இதுவரை திமுக இங்கு 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றிக்கனியைப் பறித்துள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராஜகுமார், பாமக வேட்பாளரை 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனார். இதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இத்தொகுதியை காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகச் சித்திரிக்கிறது.

உட்கட்சி பூசல்: அதிருப்தியில் திமுக!

வெளியே கூட்டணி தர்மம் பேசினாலும், உள்ளூர் அளவில் திமுக - காங்கிரஸ் இடையே நிலவும் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. "எங்கள் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, எங்களையே மதிக்கவில்லை" என்பதுதான் திமுக தொண்டர்களின் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது.

சமீபகாலமாக மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவருக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமாருக்கும் இடையே பொதுவெளியிலேயே மோதல்கள் வெடித்தன. "திமுக இல்லையென்றால் காங்கிரசுக்கு ஏது ஓட்டு? எங்களால் தான் நீங்கள் எம்.எல்.ஏ ஆனீர்கள்" என திமுகவினர் பகிரங்கமாகவே சீறுவது, கூட்டணியின் விரிசலை அம்பலப்படுத்தியுள்ளது. "எத்தனை காலம்தான் கூட்டணிக் கட்சிக்காக நாங்கள் வேலை செய்வது? சொந்தக் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே நாங்கள் களப்பணியாற்றுவோம்" என திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பதவித் தியாகம் செய்த ராஜகுமார்

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சிட்டிங் எம்.எல்.ஏ ராஜகுமார் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் ஒரு படி மேலே போய், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுப்படி தனது மாவட்டத் தலைவர் பதவியைக் கூட விட்டுக் கொடுத்துள்ளார். "எம்.எல்.ஏ சீட் வேண்டுமென்றால் மாவட்டத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டும்" என்ற நிபந்தனையை ஏற்று, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொகுதியைத் தக்கவைக்க அவர் மேற்கொண்டுள்ள ஒரு பெரும் 'ரிஸ்க்' ஆகப் பார்க்கப்படுகிறது.

கூட்டணி மாறுகிறதா? தவெக-வின் என்ட்ரி!

மயிலாடுதுறையில் திமுக பிடிவாதம் காட்டினால், அது கூட்டணியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை திமுக இத்தொகுதியை விட்டுக் கொடுக்காத பட்சத்தில், காங்கிரஸ் மாற்றுத் திட்டங்களை யோசிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இம்முறை களம் காண்பதால், காங்கிரஸுக்கும் தவெக-விற்கும் இடையே புதிய கூட்டணி உருவானால் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழல் அமைந்தால், டெல்டா அரசியலில் அது ஒரு மாபெரும் திருப்பமாக அமையும்.

முடிவு யாரிடம்?

திமுகவின் உள்ளூர் செல்வாக்கை நம்பித்தான் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது என்ற பிம்பத்தை உடைக்க திமுக தொண்டர்கள் துடிக்கிறார்கள். மறுபுறம், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைச் சுட்டிக்காட்டி 'கை' சின்னமே வெற்றிக் குறியீடு என்கிறது காங்கிரஸ்.

மயிலாடுதுறை தொகுதி, மீண்டும் ‘கை’வசம் இருக்குமா அல்லது ‘உதயசூரியன்’ அங்கு நேரிடையாக உதிக்குமா என்பது திமுக தலைமை எடுக்கும் முடிவிலேயே உள்ளது. ஒருவேளை அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால், அது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக முடிந்துவிடும் என்ற அச்சமும் ஒருபுறம் நிலவுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தவெக vs திமுக vs அதிமுக: மதுராந்தகம் இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் வாக்கு நிலவரம் என்ன?
தவெக vs திமுக vs அதிமுக: மதுராந்தகம் இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் வாக்கு நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget