Marxist communist party : மாநகராட்சி மேயர் / துணை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள்!
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்/ துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்/ துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :
மாநகராட்சி துணை மேயர் :
1. மதுரை - மதுரை மாவட்டம்.
நகராட்சி தலைவர்:
1. திருமுருகன்பூண்டி - திருப்பூர் மாவட்டம். 2. கொல்லன்கோடு - கன்னியாகுமரி மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்:
1. திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம்.
2. சிதம்பரம் - கடலூர் மாவட்டம்.
3. பழனி - திண்டுக்கல் மாவட்டம்.
பேரூராட்சி தலைவர்:
1. பெரியநாயக்கன்பாளையம் - கோவை மாவட்டம்.
2. வீரவநல்லூர் - திருநெல்வேலி மாவட்டம்.
3. அந்தியூர் - ஈரோடு மாவட்டம்.
பேரூராட்சி துணைத் தலைவர்:
1. வடமதுரை – திண்டுக்கல் மாவட்டம்.
2. தொட்டியம் - திருச்சி மாவட்டம்.
3. பண்ணைப்புரம் - தேனி மாவட்டம்.
4. கீரனூர் - புதுக்கோட்டை மாவட்டம்.
5. தளி - திருப்பூர் மாவட்டம்.
6. தேவர்சோலை - நீலகிரி மாவட்டம்.
முதல் தலித் சென்னை பெண் மேயர்: யார் இந்த 28 வயது பிரியா ராஜன்?
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சூழலில் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் யார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பிரியா ராஜன் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.
இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.