மேலும் அறிய
Advertisement
Local Body Election 2022 | கொசுவலை போர்த்தி நூதன பரப்புரை மேற்கொள்ளும் பாஜக வேட்பாளர்
கொசுவலையுடன் வந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர். டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் செய்வேன் என வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 19 ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை என இரு வேளைகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
#Abpnadu | - மதுரை மாநகராட்சி 48-வது வார்டில் போட்டியிடும் பி.ஜே.பி வேட்பாளர் அமுதா அப்பகுதி வாக்காளர்களை கவரும் வகையில் கொசு வலையை எடுத்து வந்து வாக்கு சேகரித்தார்.
— Arunchinna (@iamarunchinna) February 12, 2022
- | #abpnadu | #madurai | #Bjp | #vote | #பிஜேபி | @annamalai_k | @annamalai_chap2 . . . @Rameshkkr101 | . . . pic.twitter.com/yRSAI7tTZW
அந்த வகையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 48ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அமுதா பாலயோகி முனிச்சாலை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த வேட்பாளர் கொசுவலைக்குள் வந்து வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ளது. எனவே மாமன்ற உறுப்பினராக வந்த உடனே முற்றிலும் கொசுக்களை ஒழித்து டெங்கு இல்லாத மதுரையின் ஒரு முன்மாதிரியான வார்டாக மாற்றுவேன் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நூதன பிரச்சாரம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
48 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் அமுதா பிரச்சரத்தின் போது...” நம்முடைய வார்டில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பேன். குடி நீர் வசதி, சாலை வசதி மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கொசு காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவே இந்த முறை தாமரை சின்னத்திற்கு போட்டியிட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Watch Video | மங்கள வாத்தியத்துடன் வெற்றிலை பாக்குடன் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion