watch video | டீ போட்டு கொடுத்தும், பூ கட்டி கொடுத்தும் மாஸ் காட்டும் மதுரை வேட்பாளர்கள்
மதுரை மாநகராட்சியில் மக்களின் குறைகளை கேட்டு எழுதி வாங்கி கொண்டும், பூக்கட்டி கொடுத்தும், டீ ஆற்றி கொடுத்தும் வாக்கு சேகரித்த வேட்பாளர்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாள் பிரச்சாரமும் மக்களை கவர்கிறதோ இல்லையோ களத்தை கலகலப்பாகி வருகிறது. அதில் எந்த கட்சியும் தப்பவில்லை. இந்த ஒரு விசயத்தில் தான், பாரபட்சம் இல்லாமல், தன் பங்கை வேட்பாளர்கள் செலுத்தி வருகின்றனர்.
#Abpnadu மதுரை மாநகராட்சியில் மக்களின் குறைகளை கேட்டு எழுதி வாங்கி கொண்டும், பூக்கட்டி கொடுத்தும், டீ ஆற்றி கொடுத்தும் வாக்கு சேகரித்த வேட்பாளர்.
— Arunchinna (@iamarunchinna) February 9, 2022
| #madurai | #corporation | #dmk | #Admk | #Election2022 | @PonVimala | @sagarikaghose | @Xavierk37544297 | @minimathur
. . . . pic.twitter.com/3nuVIFqa49
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட வேட்பாளர்கள், புரோட்டா கடையில் புரோட்டா சுட்டது, பஜ்ஜி சுட்டது, டீ போட்டது, இளநீர் வெட்டியது, நாத்து நட்டது என ஏதாவது ஒரு விசயத்தை செய்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதே வழியை தற்போது பின்பற்றும் உள்ளாட்சி வேட்பாளர்கள் பல்வேறு வெரைட்டிகளை காட்டி வருகின்றனர். குறிப்பாக 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.