மேலும் அறிய

மூன்று நாள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தீர்கள் ;சுந்தர் சியிடம் - நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி !

நானும் ஒரு நடிகன்தான், ஆனால் நாட்டுக்காக என்ன தகுதியை வளர்த்துக் கொண்டீர்கள்? - பிரகாஷ்ராஜ் கேள்வி.

மதுரை மத்திய தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன், ஆதரித்து மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகரடி, தத்தனேரி அருள்தாஸ் புரம் சந்திப்பு மந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு சேகரித்து உரை நிகழ்த்தினார்.

பிரகாஷ்ராஜ் பேச்சு
 
அப்போது..,"கலைஞரும் இந்த நாட்டுக்கு செய்திருக்கிற பணி அதிகம், இந்த மக்களை நேசித்து, நேசித்து வாழ்ந்தது அதிகம், இந்த மக்கள் மண்ணுக்காக வாழ்ந்தது அதிகம். இந்த மக்களுக்காக இன்றைக்கும் பேசுகிறேன் என்றால் நன்மை செய்பவர்களைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த கட்சிக்காரனும் கிடையாது, நான் எம்.எல்.ஏ ஆக தேவையில்லை, எம்.பி ஆக தேவையில்லை. இது சினிமாவுக்கு முத்துப்பாண்டி கோட்டை, ஆனால் இது உங்க கோட்டை. இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்; இது மதுரையில மட்டும் பேசுவது இல்லை, தமிழ்நாட்டுக்கும் புரியணும்.
 
இன்றைய தேர்தல் மூன்று மாடல்களுக்கு நடுவில் நடக்கிறது:
 
திராவிட மாடல்: கல்வி கொடுத்து, மொழி மற்றும் இனம் மானத்தைக் காப்பாற்ற போராடுவது.
அடிமை மாடல்: தமிழ்நாட்டின் தன்மானத்தை மோடியின் காலடியில் வைத்த பி.ஜே.பி-அ.தி.மு.க கூட்டணி.
சினிமா மாடல்: தகுதி இல்லாமல் சினிமாவிலிருந்து வருபவர்கள். பி.ஜே.பி-யை ஒரு பாம்பிற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்களுக்கு இந்துக்கள் மேல அன்பில்லை, அதிகாரம் தான் வேண்டும். அவர்கள் 'டபுள் இன்ஜின்' சர்க்கார் என்கிறார்கள், ஆனால் இன்ஜின் டிரைவர் டெல்லியில் இருப்பார். இந்த அடிமை மாடல் நமக்கு வேண்டுமா?
 
மூன்று நாள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தீர்கள்
 
நானும் ஒரு நடிகன்தான், ஆனால் நாட்டுக்காக என்ன தகுதியை வளர்த்துக் கொண்டீர்கள்?. காந்தி போன்ற தலைவர்கள் மக்களுக்காகப் பேசிப் பேசி நம்பிக்கை வாங்கியவர்கள். எம்.எல்.ஏ பதவி என்பது லாட்டரி சீட்டு கிடையாது; பொறுப்பு மற்றும் நம்பிக்கை சம்பாதிக்க வேண்டும். ஒரு ஸ்கூல் டீச்சர் ஆக வேண்டுமென்றால் கூட தகுதி கேட்கிறார்கள், அரசியலுக்குத் தகுதி வேண்டாமா?. மிஸ்டர் சுந்தர், நீங்கள் ஒரு சினிமா டைரக்டர், ஆனால் மூன்று நாள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தீர்கள். திடீரென்று எம்.எல்.ஏ ஆக வந்துவிட்டீர்கள், இது மதுரை மக்களை ஏமாற்றுவது இல்லையா?. பத்து வருஷமாக அரசியல் பண்ணும் உங்கள் மனைவிக்கே கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?.
 
நாங்கள் இங்கே பி.டி.ஆர் (P.T.R) பற்றிப் பேசுகிறோம்; அவருடைய அறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் (Vision) இந்தியா முழுவதுமே பார்க்கிறது. அவர் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து நேரடியாக மினிஸ்டர் ஆகவில்லை, பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார். மாற்றம் முன்னேற்றத்துக்கான மாற்றமாக இருக்க வேண்டும், அது ஏமாற்றமாகிவிடக் கூடாது. இது வெறும் தேர்தலல்ல; ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும், தன்மானத்திற்கும் சுய ஆட்சிக்கும் நடக்கும் தேர்தல். மதுரை வீரமண்ணு என்று சொல்வதைச் செஞ்சு காட்டுங்கள்.

தலைப்பு செய்திகள்

Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget