Election Results 2024 LIVE: புதிய மத்திய அமைச்சரவையை பங்கு போடும் நிதிஷ், சந்திரபாபு - நெருக்கடியில் பாஜக
Lok Sabha Election Results 2024 LIVE: மக்களவைத் தேர்தலில் எண்ணிக்கை தொடங்கியது முதல் தற்போது வரை , இந்திய அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
LIVE

Background
ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை - கே.பி. முனுசாமி
அதிமுக ஒன்றுபட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில், அதிமுக குறித்து பேச ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை என, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையிடம் கூட்டணி வைத்தவர் தன் ஓபிஎஸ் என சாடியுள்ளார்.
நிதிஷ்குமார் ஆலோசனை
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மோடி தலைமயிலான அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்து
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜனாதிபதி ஜோசப் ஆர். பிடன், ஜூனியர், நரேந்திர மோடியுடன், இந்தியப் பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு தலைவர்களும் அமெரிக்கா-இந்தியா இடையேயான விரிவான மற்றும் உலகளாவிய உறவை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்கள். மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒரு இலவச, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட பார்வையை முன்னேற்றுவதற்கு. இரு தலைவர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் டெல்லிக்கு வரவிருக்கும் பயணம் குறித்து விவாதித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒன்றுபட வேண்டும் - ஓபிஎஸ்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல்”என குறிப்பிட்டுள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். pic.twitter.com/zPtVopWIk0
— O Panneerselvam (@OfficeOfOPS) June 6, 2024
சந்திரபாபு நாயுடு பதிவியேற்பு விழா ஒத்திவைப்பு
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு வரும் 8ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதேநாளில் மோடியும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சந்திரபாபு நாயுடு தனது பதவியேற்பு விழாவை வரும் 12ம் தேதி க்கு ஒத்திவைத்துள்ளார் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

