மேலும் அறிய

TN Lok Sabha Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை; மயிலாடுதுறையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை காலை 8 மணிக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை மை அடுத்த ஏபிசி தனியார் கல்லூரியில் அதிகபட்சமாக 22 சுற்றுகள் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூன் 4 -ம் தேதியான இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

TN Lok Sabha Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை; மயிலாடுதுறையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

தொகுதி விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி), 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.

TN Lok Sabha Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை; மயிலாடுதுறையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

பதிவான வாக்குகள்:

160.சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 86,100 ஆண் வாக்காளர்களும், 91,815 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 1,77,919 வாக்குகள் பதிவாகினர்.

161. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 80,308 ஆண் வாக்காளர்களும், 82,542 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,62,852 வாக்குகள் பதிவாகினர். 

162. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 93,162 ஆண் வாக்காளர்களும், 1,00,872 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1 பேரும் என மொத்தம் 1,94,035 வாக்குகள் பதிவாகினர். 

170. திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 89,873 ஆண் வாக்காளர்களும், 94,858 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என மொத்தம் 1,84,734 வாக்குகள் பதிவாகினர். 

171. கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 89,058 ஆண் வாக்காளர்களும், 92,808 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,81,868 வாக்குகள் பதிவாகினர். 

172. பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 87,028 ஆண் வாக்காளர்களும், 94,798 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேரும் என மொத்தம் 1,81,835 வாக்குகள் பதிவாகினர். 

வாக்குசாவடிகள் விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் என மொத்தம் 1743 வாக்குசாவடிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.

TN Lok Sabha Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை; மயிலாடுதுறையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

வாக்கு எண்ணும் பணி அலுவலர்கள் விபரம் 

வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் 706 பேரும், 111 நுண் பார்வையாளர்களும், பாதுகாப்பு பணியில் 593 காவலர்களும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மேசைகள் விவபரம் மற்றும் சுற்றுகள்

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் வீதம் 84 மேசைகளும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 7 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுக்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு 21 சுற்றுக்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்கள், தபால் வாக்குகளுக்கு 2 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால்  பரபரப்பு
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget