Lok Sabha Election Result 2024: மக்களவை தேர்தல்! இஸ்லாமிய வேட்பாளர்களின் நிலை என்ன? மதச்சார்பின்மை வென்றதா?
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இஸ்லாமிய வேட்பாளர்களில், வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இஸ்லாமிய வேட்பாளர்கள் தொடர்பான முடிவுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, தற்போதைய சூழலில், பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், நடப்பு தேர்தலில் மதம் சார்ந்த வெறுப்பு பேச்சு அதிகம் காணப்பட்டதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கே பறந்தன. இந்த சூழலில் பல முன்னணி கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட்ட, இஸ்லாமிய வேட்பாளர்களுக்கான தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பிரதான கட்சிகளின் இஸ்லாமிய வேட்பாளர்கள்:
நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் இருந்தாலும், மொத்தமே 68 இஸ்லாமிய வேட்பாளர்கள் மட்டுமே பிரதான கட்சிகளால் வேட்பாளர்களக களமிறக்கப்பட்டனர். மத்தியில் ஆளும் பாஜக ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பளித்தது. ஆனால் அவரும் தோல்வியை தழுவினார். இதனிடையே, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம், சிபிஐ, பிஜேடி, ஆர்ஜேடி, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இஸ்லாமியர்களை வேட்பாளர்களை களமிறக்கியது. அதில், தற்போது 22 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி முகத்தில் இஸ்லாமிய வேட்பாளர்கள்:
மாநிலம்/யூ.டி |
தொகுதி பெயர் |
வேட்பாளர் |
கட்சி |
முடிவுகள் |
அசாம் |
துப்ரி |
ரகிபுல் ஹுசைன் |
காங்கிரஸ் |
வெற்றி |
பீகார் |
கிஷன்கஞ்ச் |
Md. ஜாவேத் |
காங்கிரஸ் |
வெற்றி |
ஜே & கே |
அனந்த்நாக்-ராஜௌரி |
மியான் அல்தாஃப் அகமது |
NC |
வெற்றி |
ஜே & கே |
பாரமுல்லா |
அப்துல் ரஷீத் ஷேக் |
சுயேச்சை |
வெற்றி |
ஜே & கே |
ஸ்ரீநகர் |
ஆகா சையத் ராகுல்லா மெஹ்தி |
NC |
வெற்றி |
லடாக் |
லடாக் |
மு. ஹனீபா |
சுயேச்சை |
வெற்றி |
லட்சத்தீவு |
லட்சத்தீவு |
Md. ஹம்துல்லா சயீத் |
காங்கிரஸ் |
வெற்றி |
கேரளா |
மல்லாபுரம் |
ET Md. பஷீர் |
ஐ.யு.எம்.எல் |
வெற்றி |
கேரளா |
பொன்னானி |
அப்துஸ்ஸமத் சம்தானி |
ஐ.யு.எம்.எல் |
வெற்றி |
கேரளா |
வடகரை |
ஷாபி பரம்பில் |
காங்கிரஸ் |
வெற்றி |
தெலுங்கானா |
ஹைதராபாத் |
அசாதுதீன் ஒவைசி |
AIMIM |
வெற்றி |
உத்தரப்பிரதேசம் |
காஜிபூர் |
அப்சல் அன்சாரி |
எஸ்பி |
வெற்றி |
உத்தரப்பிரதேசம் |
கைரானா |
இக்ரா சௌத்ரி |
எஸ்பி |
வெற்றி |
உத்தரப்பிரதேசம் |
சஹாரன்பூர் |
இம்ரான் மசூத் |
காங்கிரஸ் |
வெற்றி |
உத்தரப்பிரதேசம் |
ராம்பூர் |
மொஹிப்புல்லாஹ் |
எஸ்பி |
வெற்றி |
உத்தரப்பிரதேசம் |
சம்பல் |
ஜியா-யுஆர்- ரெஹ்மான் |
எஸ்பி |
வெற்றி |
மேற்கு வங்காளம் |
பெர்ஹாம்பூர் |
யூசுப் பதான் |
டி.எம்.சி |
வெற்றி |
மேற்கு வங்காளம் |
பாசிர்ஹத் |
எஸ்.கே.நூருல் இஸ்லாம் |
டி.எம்.சி |
வெற்றி |
மேற்கு வங்காளம் |
மால்டா தக்சின் |
இஷா கான் சவுத்ரி |
காங்கிரஸ் |
வெற்றி |
மேற்கு வங்காளம் |
ஜாங்கிபூர் |
கலீலுர் ரஹ்மான் |
டி.எம்.சி |
வெற்றி |
மேற்கு வங்காளம் |
முர்ஷிதாபாத் |
அபு தாஹர் கான் |
டி.எம்.சி |
வெற்றி |
மேற்கு வங்காளம் |
உலுபெரியா |
சஜ்தா அகமது |
டி.எம்.சி |
வெற்றி |