மேலும் அறிய

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக, தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

பாஜக கூட்டணியில் மூன்று அணியினர் தஞ்சை தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடித்த நிலையில் யாருக்கும் இல்லை நானே நிற்கிறேன் என்று பாஜக தன் வேட்பாளரை அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்: பாஜக கூட்டணியில் மூன்று அணியினர் தஞ்சை தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடித்த நிலையில் யாருக்கும் இல்லை நானே நிற்கிறேன் என்று பாஜக தன் வேட்பாளரை அறிவித்துள்ளது. அந்த வகையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் களம் காண்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு முன்னணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக மட்டும் தன் கட்சி வேட்பாளராக முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக வேட்பாளர் இன்னும் அறிவிக்காமல் இருந்து வந்தது. 

பிடிவாதம் பிடித்த கட்சிகள்

இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளான அமமுக,  தமாகா, ஓபிஎஸ் அணி தஞ்சை தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடித்து வந்துள்ளனர். டிடிவி தினகரன் தேனி தொகுதியை கேட்ட நிலையில் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. எனவே டிடிவி தினகரன் தஞ்சை தொகுதியை தனக்கு ஒதுக்கி தருமாறு பிஜேபியிடம் வலுவான கோரிக்கையை வைத்திருந்தார். அதேபோல் தஞ்சை தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தன் மகனுக்கு சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார் என்று கூறப்பட்டது.

மேலும் தமாகா கட்சித் தலைவர் ஜி கே வாசன் தஞ்சை தொகுதி தான் எனக்கு வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். இப்படி ஒரே கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளும் ஒரே தொகுதியை கேட்டு அடம்பிடித்து வந்ததால் பாஜக சட்டென்று தஞ்சை தொகுதியை தானே எடுத்துக் கொண்டுள்ளது. அதன்படி தஞ்சை பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம்  அறிவிக்கப்பட்டுள்ளார். 

பாஜக வேட்பாளர் அறிவிப்பு

பாஜக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள கருப்பு M.முருகானந்தம் மாநில பொதுச் செயலாளர் உள்ளார். இவர் 09.08.1974 அன்று பிறந்தவர். தஞ்சை வி.பி. கார்டனில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் முத்துகிருஷ்ணன் இறந்து விட்டார். தாய் பெயர் சாரதாம்பாள், மனைவி பெயர் தீபாராணி, குழந்தைகள் பெயர் தேவசேனா 14 வயது, மணிகர்ணிகா - 12 வயது, வீரஅபிமன்யு - 9 வயது. பாஜகவின் இந்த அதிரடி முடிவு கூட்டணிக கட்சிகளுக்குள் இப்போதே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை தொகுதி எங்களுக்குதான்

தஞ்சை தொகுதி பாஜக கூட்டணியில் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விட்டது. 1986 முதல் தன்னை ஆர்எஸ்எஸ் தன்னை இணைத்து ொண்டவர் 1998 முத்துப்பேட்டை மண்டல் அமைப்பாளர், 1999 - 2002 -முத்துப்பேட்டை  மண்டலத் தலைவர், 2002 - 2005 - திருவாரூர் மாவட்ட செயலாளர், 2005 - 2008 - திருவாரூர் மாவட்ட தலைவர்,  2008 - 2009 - மாநில இளைஞரணி தலைவர், 2009 - 2011 - மாநிலச் செயலாளர், 2011 to 2014 - மாநில பொதுச் செயலாளர், 2014 to 2016 - மாநில துணைத் தலைவர். 2016 - 2020 - மாநில பொதுச் செயலாளர். 2020 - மாநிலத் துணைத் தலைவர், 2022ல் இருந்து தற்ோது வரை - மாநில பொதுச் செயலாளராக உள்ளார். பாஜக தஞ்சை நாடாளுமன்ற ொகுதி வேட்பாளராக தற்சமயம் களம் இறங்குகிறார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக, தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

இதேபோல் தேமுதிக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் பெ.சிவநேசன் தஞ்சை தேமுதிக வேட்பாளராக களம் காண்கிறார். இவரது தந்தை பெயர் - த.பெருமாள், தாய் - பெ.கல்யாணி, மனைவி-சி.பவளகொடி, மகன்கள்-சி.ஹரிசுதன், சி.வீரகபிலன்,  தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்பு காரத்தெருவில் தம்பி ஆர்சுத்தியார் அவர்களின் பேரனும் த.பெருமாள்- பெ.கல்யாணி தம்பதியினரின் ஐந்தாவது மகனாக 15.03.1973 ல் பிறந்தார். 2006-ல் தேமுதிக தஞ்சை மாவட்ட சட்டமன்ற உறுப்பினராக களம் இறங்கியவர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Embed widget