Prashant Kishor: ராகுல் காந்தி ஒதுங்க வேண்டும்! பாஜக வாக்கு வாங்கி எவ்வளவு தெரியுமா? - பிரசாந்த் கிஷோர் அதிரடி பேச்சு
Prashant Kishor: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், ராகுல் காந்தி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.
Prashant Kishor: மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் தென் மாநிலங்களில் கூட பாஜக அலை வீசலாம் என, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
வாய்ப்புகளை கோட்டைவிட்ட எதிர்க்கட்சிகள் - பிரசாந்த் கிஷோர்:
நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்தார். அப்போது, ”எதிர்க்கட்சிகளுக்கு பாஜகவைத் தடுக்க மூன்று தனித்துவமான மற்றும் யதார்த்தமான வாய்ப்புகள் இருந்தன. அதாவது, 2014ல் மத்தியில் ஆட்சியை பிடித்தபோதும் மாநில சட்டமன்ற தேர்தலில் அடுத்தடுத்து தோல்வி கண்டது. பணமதிப்பு இழப்பு மற்றும் கொரோனா போன்ற பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் திறம்பட கையாளவில்லை. சோம்பேறித்தனம் மற்றும் தவறான உத்திகள் காரணமாக வாய்ப்புகளை இழந்துவிட்டன. இதனால், பெரும் பிரச்னைகளில் இருந்து பாஜக எளிதில் மீண்டு வந்துவிட்டது. இப்போது பாஜகவை வீழ்த்துவது எளிதல்ல.
”தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி”
பாஜக பலவீனமாக உள்ள தென் மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் கூட, இந்த முறை வாக்கு வங்கியை கணிசமாக அதிகரிக்கும். தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் மற்றும் கேரளாவில் மொத்தம் 204 இடங்கள் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு தேர்தல்களில், ஒருமுறை கூட மொத்தமாக 50 இடங்களை கூட பாஜகாவால் கைப்பற்றமுடியவில்லை. ஆனால், 2024 தேர்தலில் அந்த நிலை மாறலாம். மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் பாஜக முதலிடத்தை பிடிக்கலாம். தெலங்கானாவில் முதல் அல்லது 2-வது இடத்தை பிடிக்கும். தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வாக்கு வங்கியை பெற வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள், மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் செய்துள்ளனர். இதனால், அங்கு கட்சி வலுப்பெற்றுள்ளது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் அங்கு சரியாக களப்பணியாற்றவில்லை.
காங்கிரசுக்கான வாய்ப்பு என்ன?
வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் ஒரு 100 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே, பாஜகவை பலவீனப்படுத்த முடியும். ஆனால், அது சாத்தியமில்லை. அங்கு பாஜக பெருவாரியான தொகுதிகளை கைபற்றும். மொத்தமாக 300 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றக் கூடும். ஆனால், 370 என்ற அவர்களின் இலக்கு நிறைவேற வாய்ப்பில்லை. இதனிடையே, I.N.D.I.A. கூட்டணியிடம் பிரதமர் வேட்பாளரோ, நிகழ்ச்சி நிரலோ அல்லது கருத்து ஒற்றுமையோ கிடையாது. அதோடு, 350 இடங்களில் கூட்டணி கட்சிகளே எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனால் அவட்ர்களின் வெற்றி மிகவும் கடினமானது.
”ராகுல் காந்தி ஒதுங்க வேண்டும்”
காங்கிரஸ் கட்சிக்கான மறுமலர்ச்ச் திட்டத்தை ராகுல் காந்தி கொண்டு வந்தார். ஆனால், அது பலனளிக்காதபோது தனது தலைவர் பதவியை துறந்தார். எந்தவித வெற்றியுமின்றி கடந்த 10 வருடங்களாக ஒரே வேலையைச் செய்யும்போது ஒய்வு எடுப்பதில் எந்தப் பாதிப்பும் இல்லை. 5 வருடங்கள் வேறு யாரையாவது அந்த பணிகளை செய்ய அனுமதிக் வேண்டும். உங்களது தாயார் அதை தான் செய்தார்கள். . உலகெங்கிலும் உள்ள நல்ல தலைவர்களின் முக்கிய பண்பு என்னவென்றால், அவர்களுக்கு என்ன குறை இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பதும், அந்த இடைவெளிகளை நிரப்ப தீவிரமாக முயற்சிப்பதும் ஆகும், ஆனால், ராகுல் காந்திக்கு எல்லாம் தெரியும் என்று தெரிகிறது. உதவி தேவை என்பதை நீங்கள் உணரவில்லை என்றால் யாரும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செய்யக்கூடிய ஒருவர் தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை. எனவே மக்களவ தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாவிட்டால், ராகுல் காந்தி ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.