மேலும் அறிய

Election 2024: I.N.D.I.A கூட்டணியை எண்ணிக்கையில் ஓரம் கட்டும் பாஜகவின் NDA; யார் யார் எந்த கூட்டணியில்?

Election 2024: மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 18வது மக்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு  புதிதாக உருவாக்கப்பட்ட I.N.D.I.A கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆட்சிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற அனைத்து வாய்ப்புகளும் உள்ளதால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தங்களை தயார் செய்து வருகின்றது. பாஜக சார்பில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். காங்கிரஸைப் பொறுத்தவரையில் அனைவரும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ நியாய் யாத்திரை நம்பி உள்ளார்கள் என்ற விமர்சனம் எழாமல் இல்லை. ஆனால் அதேநேரத்தில் I.N.D.I.A கூட்டணிக்குள் இருக்கும் மற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. குறிப்பாக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் திமுக, பாசிசம் வீழட்டும் I.N.D.I.A வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது. 

17 வது மக்களவைக்கான தேர்தல் 2019 இல் நடந்தது.  நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக  கூட்டணி 353 இடங்களை வென்றது. பாஜக தனித்து 303 இடங்களை வென்றது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 31 இடங்கள் அதிகம். பெரும்பான்மைக்கு 272 இடங்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது

2024 பொதுத் தேர்தல்களில் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்?  

2014ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஏழு கட்டங்களாகக் நடத்தப்பட்டது. அதேபோல் இம்முறையும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பொதுத் தேர்தல் 2024க்கான NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கூட்டணிக் கட்சிகளின் பட்டியல்:

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக தலைமையின்  கீழ் மொத்தம் 35 கட்சிகள் தற்போது வரை உள்ளது. அதேபோல் I.N.D.I.A கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளது. I.N.D.I.A கூட்டணி அமைவது தெரிந்தவுடன் பாஜக நாடு முழுவதும் உள்ள சின்ன சின்னக் கட்சிகள் தொடங்கி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் வரை தங்களது அணியில் சேர்க்க திட்டம் தீட்டி பல கட்சிகளை இணைத்தது. பல கட்சிகள் தாங்களாகவே பாஜக கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இப்படியாக பாஜக கூட்டணியில் இன்றைய தேதிக்கு அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி வரை 35 கட்சிகள் கூட்டணியில் உள்ளது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளின் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் உறுதியாக தெரியாமல் உள்ளது. ஆனால் பாஜகவின் அரசியல் கணக்கில் தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும், பீகாரில் ஆட்சியில் உள்ள நிதிஷ் குமாரின்  ஐக்கிய ஜனதா தளத்தினை I.N.D.I.A கூட்டணியில் இருந்து பிரித்து தன் வசப்படுத்தியுள்ளது. 

அதேநேரத்தில் I.N.D.I.A கூட்டணியில் தற்போது 26 கட்சிகளும் நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் பலமான வாக்கு வங்கியில் இருந்து கணிசமான வாக்கு வங்கி வரை வைத்துள்ள கட்சிகள் தான். I.N.D.I.A கூட்டணிக்குள் இருக்கும் பல கட்சிகளுக்கு பாஜக வலைவீசிக்கொண்டு இருப்பதை மறுக்க முடியாத ஒன்று.  I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கையை விடவும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது உண்மை என்றாலும், எண்ணிக்கை எப்போதும் முடிவை தீர்மானிப்பதில்லை என பல தேர்தல்கள் பாடம் புகட்டிச் சென்றுள்ளது. இப்படியான நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் கோலோச்சப்போவது யார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்

  1. பாரதிய ஜனதா கட்சி (BJP)
  2. தேசிய மக்கள் கட்சி 
  3. சிவசேனா ( ஏக்நாத் சிண்டே )
  4. தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
  5. ஜனதா தளம் (மதச்சார்பற்ற)
  6. ஐக்கிய ஜனதா தளம் 
  7. லோக் ஜனசக்தி கட்சி 
  8. ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி 
  9. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 
  10. ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம்
  11. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
  12. அசோம் கண பரிஷத்
  13. ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
  14. அப்னா தால் (சோனிலால்)
  15. நிஷாத் கட்சி
  16. சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி
  17. அகில இந்திய என்ஆர் காங்கிரஸ்
  18. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
  19. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
  20. மிசோ தேசிய முன்னணி 
  21. ஜனநாயக்க ஜனதா கட்சி
  22. ஹரியானா லோகித் கட்சி
  23. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி
  24. திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
  25. நாகா மக்கள் முன்னணி
  26. சிரோமணி அகாலி தளம் சம்யுக்தா
  27. பாரத தர்ம ஜன சேனா
  28. கேரள காமராஜ் காங்கிரஸ் 
  29. இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே)
  30. ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா
  31. பிரஹர் ஜனசக்தி கட்சி
  32. ஜன் சுராஜ்ய கட்சி
  33. ஐக்கிய ஜனநாயகக் கட்சி
  34. மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
  35. கோர்கா தேசிய விடுதலை முன்னணி

I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள்

  1. இந்திய தேசிய காங்கிரஸ்
  2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
  3. ஆம் ஆத்மி கட்சி
  4. திராவிட முன்னேற்றக் கழகம்
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  6. ராஷ்ட்ரிய ஜனதா தளம்
  7. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
  8. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்)
  9. சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்ரே)
  10. வஞ்சித் பகுஜன் ஆகாடி
  11. இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி 
  12. ஸ்வாபிமானி பக்ஷ
  13. சமாஜ்வாதி கட்சி
  14. ராஷ்ட்ரிய லோக் தளம்
  15. அப்னா தல் (காமராவாடி)
  16. ஆசாத் சமாஜ் கட்சி
  17. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
  18. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி
  19. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  20. கேரள காங்கிரஸ் (எம்)
  21. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி
  22. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
  23. மனிதநேய மக்கள் கட்சி
  24. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  25. விடுதலை சிறுத்தைகள் கட்சி
  26. அகில இந்திய பார்வர்டு பிளாக்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget