மேலும் அறிய

Lok Sabha Election 2024: விவசாயி சின்னம் அச்சடித்த துண்டோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விவசாயி சின்னம் அச்சடித்த துண்டோடு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

பிரபாகரன் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்த நாகை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா.
 
நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகா அக்கட்சியின் தொண்டர்கள் புடைசூழ தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200 மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி மக்களின் கவனத்தை ஈர்த்தனர். அப்போது இதுவரை நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காததை கண்டித்து"சீமான் சின்னம் என்ன?" என்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விவசாயி சின்னம் பொருந்திய துண்டோடு வந்த வேட்பாளரை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் சீமான் முகம் பொறித்த மற்றொரு துண்டை அணிந்து வேட்பாளரை அழைத்து வந்தனர்.

Lok Sabha Election 2024: விவசாயி சின்னம் அச்சடித்த துண்டோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
 
இது ஒருபுறம் இருக்க 200 மீட்டர் தனது ஆதரவாளர்கள் நான்கு நபர்களுடன் நடந்து வந்த நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தங்களுடன் எங்கள் கட்சியை சேர்ந்த 4 நபர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டுமென போலீஸிடம் வாக்குவாதம் செய்தார். அதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்து நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அவர்களை திருப்பி அனுப்பினார். பின்னர் நாம் தமிழர் கட்சியின் நாகை வேட்பாளர் கார்த்திகா மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் வசம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழி படிவத்தை வாசித்த அவர் ஆண்டவன் மீது சத்தியமாக என்பதற்கு பதிலாக தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
 
உறுதிமொழி படிவத்தில் ஆண்டவன் மீது ஆணையாக இருந்ததை பிரபாகரன் மீது என மாற்ற காரணமென்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா, 13 கோடி உலக தலைவர்களுக்கு ஆண்டவர், எங்களுக்கான இறைவன் அவர் அதனால் அவர் பெயரை சொல்லி உறுதிமொழி ஏற்றேன். எங்களுக்கு சின்னம் முக்கியமில்லை மக்களின் எண்ணம்தான் முக்கியம் என்று பதிலளித்த அவர், மக்களுக்கு எந்தவிதமான கொள்கைகளை எடுத்து செல்கிறோம் என்பதுதான் முக்கியம் நாளை சின்னம் கிடைத்துவிடும் என்றார்.
 
நாடாளுமன்றம் செல்வது எந்த பிரதமரையும் ஆதரிக்க செல்லவில்லை, காவிரியில் இருந்து தண்ணீரை பெற்றுத்தர போராடுவோம். பல அணிகள் உள்ள நாம் தமிழர் கட்சியில் எப்படி வெல்கிறது என்பதை தேர்தல் முடிந்து பாருங்கள் என்று சவால்விட்ட நாம் தமிழர் வேட்பாளர், டாஸ்மாக்கை நிறுவியவர் எம்ஜிஆர், மதுபான கடைகளுக்கு குளிர்சாதன பெட்டி வாங்கி கொடுத்தவர் ஜெயலலிதா என விமர்சனம் செய்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும்தான் போட்டி என்றுகூறியவர் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வெல்லும் என்று சவால் விட்டார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Embed widget