Udhayanithi Stalin: 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மோடி இதே போல் தமிழகத்திற்கு ஏதாவது செய்தாரா? - அமைச்சர் உதயநிதி
தமிழ்நாட்டில் இந்திய அளவில் முதன்முதலாக காலை உணவு திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
![Udhayanithi Stalin: 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மோடி இதே போல் தமிழகத்திற்கு ஏதாவது செய்தாரா? - அமைச்சர் உதயநிதி Lok Sabha Election 2024 Minister Udhayanidhi says Has Modi done something similar for Tamil Nadu after 10 years in power - TNN Udhayanithi Stalin: 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மோடி இதே போல் தமிழகத்திற்கு ஏதாவது செய்தாரா? - அமைச்சர் உதயநிதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/41f7269b5bb65ba8bf48e05918c301b81712861160036571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து நெல்லை மேலப்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 32 தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருநெல்வேலி தொகுதி நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் 33 வது தொகுதி. நமக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸுக்கு நீங்கள் ஓட்டு போட்டு பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும். சாலை பணிகள் பாதாள சாக்கடை பணிகள் என ஆயிரம் கோடி ரூபாய்க்கு நெல்லை தொகுதியில் பணிகள் நடந்து வருகிறது. அனைத்து மக்கள் நில திட்ட பணிகளும் தொடர இந்திய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ராபர்ட் ப்ரூஸுக்கு வாக்கு கேட்டு நெல்லை மேலப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து பாளையங்கோட்டை குல வணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் ஒய் வடிவத்தில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். 2016 ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் விலை 415 ரூபாய், தற்போது கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் , யார் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தினார்கள். பெட்ரோல் டீசல் விலை கண்டிப்பாக குறைக்கப்படும் என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி படத்தை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா ? இவர்தான் ஸ்டாலின் பெயர் வைத்த பாதம் தாங்கி பழனிச்சாமி!, பதவி கொடுத்த சசிகலா காலை வாரிவிட்டவர். ஒட்டுமொத்த தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் என்று விமர்சித்தார்.
கொரோனா காலத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தவே பயந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கோவிட் ஊசியை போட்டுக்கொண்டு கோயம்புத்தூரில் கொரோனா உடை அணிந்து தைரியமாக சென்று மக்களோடு மக்களாக பணியாற்றியவர். ஸ்டாலின் வெற்றி பெற்ற முதல்வர். பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைப்பேன் எனக்கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இரண்டாவது ஆக மகளிருக்க இலவச பேருந்து பயண வாக்குறுதியை நிறைவேற்றினார். இதன் மூலம் 465 கோடி பணங்கள் நடந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது தான் திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதியான புதுமைப்பெண் திட்டத்தையும் நிறைவேற்றி தந்தவர் முதல்வர் மு க ஸ்டாலின். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஐந்தாயிரம் பெண்கள் மாதாமாதம் ஊக்கத்தொகை பெறுகிறார்கள். இப்பொழுதுதான் தமிழ்நாட்டில் இந்திய அளவில் முதன்முதலாக காலை உணவு திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் 18 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பலன் அடைந்து வருகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் மிக மிக சிறந்த திட்டம் என கன்னடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ பாராட்டி உள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் மகளிர் கல்வி திட்டத்தின் கீழ் 22,000 மாணவிகள் மாதந்தோறும் பயன் அடைந்து வருகின்றனர். ஒரு கோடியே 18 லட்சம் மகளிருகு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை 15 ஆம் தேதி ஒவ்வொரு மாதமும் வரவழைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மகளிருக்கும் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.
நாங்கள் இத்தனை திட்டங்களை செய்திருக்கிறோம். 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மோடி இதே போல் தமிழகத்திற்கு ஏதாவது செய்தாரா? வரலாறு காணாத திருநெல்வேலி பெருமழை வெள்ளத்தின் போது நான் இங்கே ஐந்து நாட்கள் தங்கி இருந்து முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி 10 அமைச்சர்களுடன் களப்பணி ஆற்றினோம். மத்திய அரசு மழை வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தமிழக அரசு 100 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது. 6 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. மழை வெள்ள நிவாரண நிதி கொடுத்தது யார்? மத்திய அரசு கொடுத்ததா ? மழை வெள்ள பாதிப்பின் போது 200 கோடி ரூபாய் சிறு குறு தொழில் மற்றும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதியாக கொடுக்காத திருநெல்வேலி மாவட்ட மக்களை மதிக்காத மத்திய அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என்றார்.
சென்னையில் பல்நோக்கு மருத்துவமனையை ஒரு வருடத்தில் கட்டி தருவேன் எனக் கூறிய முக ஸ்டாலின் பத்து மாதங்களில் கட்டி அதை திறந்து வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கொடுத்தால் மத்திய அரசு அதில் 29 பைசா தான் திருப்பி தருவதாக பதாகையை காண்பித்து பேசினார். எந்த உருட்டல் மிரட்டலுக்கும் பயப்படாத கலைஞர் வழியில் வந்தவர்கள் நாங்கள். குடியுரிமைச் சட்டம் மற்றும் நீட் தேர்வு பற்றி குறிப்பிட்டு பேசினார். கலைஞர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையவில்லை என்றார். அதே போல அனிதா மற்றும் சென்னை ஜெகதீசன் மரணத்தை குறிப்பிட்டு ஒரு குடும்பத்தையே நீட் தேர்வால் இழந்திருக்கிறோம் என கூறினார். நீங்கள் அனைவரும் கை சின்னத்திற்கு தான் வாக்களிப்பீர்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் உடைய நூற்றி ஒன்றாவது பிறந்தநாள். அந்த நாளில் 40 க்கு 40 தொகுதியிலும் வெற்றி பெற்று அந்த வெற்றியை கலைஞரின் பாதமலர்களில் சமர்ப்பிக்க வேண்டும் என உங்கள் வீட்டுப் பிள்ளையாக கேட்கிறேன் என உரையை நிறைவு செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)