கரூரில் பஜ்ஜி சுட்டுக்கொடுத்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த பாத்திமா பாபு
கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாத்திமா பாபு பெரிய குளத்து பாளையம் பகுதியில் திறந்த வேனில் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாத்திமா பாபு பெரியகுளத்துபாளையம் பகுதியில் திறந்த வேனில் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்திற்கு 77 கோடி மதிப்பில் மூன்று புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி ஒழிக்க வேண்டும். குடும்ப ஆட்சி கலைத்திட வேண்டும். பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை புரட்சித்தலைவி அம்மா துவக்கி வைத்துள்ளார். ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் திட்டம் அதிமுக அரசு கொண்டு வந்தது. ஆனால் இன்று முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக சேவை செய்யும் கட்சி அதிமுக கட்சி அதனால்தான் தேமுதிக கட்சி எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்து திட்டமான பசுமை வீடு திட்டம், அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், மருத்துவ காப்பீடு திட்டம் என பல்வேறு திட்டங்கள் எல்லாம் இந்த திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டினார். பிரச்சாரத்தை முடித்து விட்டு அருகில் உள்ள பலகார கடையில் பஜ்ஜி சுட்டுக்கொடுத்து வாக்குகள் சேகரித்தார்.