மேலும் அறிய

மோடி ஆட்சியில் ஜனநாயகம் தீவிர சிகிச்சை பிரிவில் மரண படுக்கையில் உள்ளது - கி வீரமணி

ஊழலில் புது விதமாக ப்ரிபெய்டு  ஊழல்,  போஸ்ட் பெய்டு ஊழல் என பாஜக செய்கிறது. மோடி கேரண்டீ என புது டீ கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் மோடி கொடுத்த டீ வித்தியாசமானது. அந்த கேரண்டி என்னானது?  

நெல்லை தச்சநல்லூர் சாவடி திடலில் இந்தியா கூட்டணி நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி வீரமணி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ”மாற்றம் தேவை மாற்றம் தேவை என ஆட்சிக்கு வந்தவர்களால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஊழலில் புது விதமாக பிரிபெய்டு  ஊழல்,  போஸ்ட் பெய்டு ஊழல் என பாஜக செய்கிறது. மோடி கேரண்டீ என புது டீ கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் மோடி கொடுத்த டீ வித்தியாசமானது. அந்த கேரண்டீ என்னானது? ” என்றார்

”ஊழலை ஒழிப்பேன் என சொன்னவர்கள் தேர்தல் பத்திரம் மூலமாக விஞ்ஞான பூர்வ ஊழலை செய்துள்ளனர். ஜூன் 5 - ந்தேதிக்கு  பிறகு இந்திய நாட்டில் அமைவது இந்திய கூட்டணி ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. 140 கோடி மக்களும் என் குடும்பம் என மோடி சொன்னாலும் மக்கள் ஏமாறமட்டார்கள். மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தது. மோடி அவர்களே 140 கோடி மக்களும் எங்கள் குடும்பம் என்று சொன்னால் மணிப்பூர் சென்று ஆறுதல்  கூறியிருக்க வேண்டும்.

நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் களத்தில் இருந்தனர்.  இது மனித நேய இயக்கம். மோடி தமிழகத்திற்கு 3 முறைக்கு மேல் வந்தார். வெள்ளம் பாதித்த மக்களை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்காமல் வாக்கு கேட்க என்ன உரிமை உள்ளது. உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர விவகாரத்தில் காதை திருகியது. எந்த சார்பும் இல்லாத உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டார்கள்.

உங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் செய்கிறோம் என சொன்ன பிறகு வேகமாக பணிகள் நடந்தது. முன்பு ஆளுநர்கள் ஆளுநர்களாக இருந்தார்கள். ஆளுநர்கள் தற்போது வித்தைகாரர்களாகவும், அம்புகளாகவும் உள்ளனர். 5 ஆண்டுகளில் உலக வரலாற்றில் எங்கும் இல்லாத கொடுமை நடந்துள்ளது. அரசியல் சட்டம் சொன்னதையும் மீறி எதனை பற்றியும் கவலைப்படாமல் நாங்கள் வைப்பது தான் சட்டம் என மத்திய அரசு நடந்து வருகிறது.

மத்திய அரசை எதிர்த்து கேட்டால் மிருகபலம் இருப்பதால் எந்த பதிலையும் சொல்வதில்லை. 146 எம்.பிக்களை தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்தனர். ஜனநாயகத்தை காப்பற்ற வேண்டிய மிக முக்கியமான தேர்தல் தற்போது நடக்கும் தேர்தல். உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மருத்துவர்கள் மறுத்த காரணத்திலும் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். மோடி ஆட்சியில் ஜனநாயகம் தீவிர சிகிச்சை பிரிவில் மரண படுக்கையில் உள்ளது. அதனை காக்கும் சிறந்த மருத்துவராக  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டம் தூக்கி எரியும் நிலையில் உள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு செம்மொழி அந்தஸ்தை தமிழுக்கு தந்ததுடன் தமிழகத்திற்கான பல திட்டங்களை தந்தது. மாற்றம் என்பது இயல்பானது. மாற்றம் என மக்கள் நினைத்து ஏமாற்றத்தில் விழுந்தனர். தமிழ், தமிழ் என சொல்லும் மோடி செத்தமொழி என சொல்லப்படும் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் 10% நிதிக்கூட தமிழுக்கு இல்லை.

நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி என யாருக்கும் தெரியாமல் ₹500 ,₹1000-ம் செல்லாது என ₹2000 நோட்டை மோடி அறிவித்தார். இப்போது அதுவும் செல்லாது என மோடி அறிவித்துள்ளார். பிரிபெய்டு போஸ்பேய்டு  ஊழலில் நிதித்துறை சட்ட மாற்றம், தேர்தல் ஆணைய சட்டம் என பல சட்டங்களை பல முறை மாற்றி அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்கின்றனர். உச்சநீதிமன்றம் வேகமாக உலுக்கிவிட்டுக் கேட்டதால் தான் பல ஊழல்கள் வெளியில் வருகிறது. ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிக்கும் விதமாக இருக்காமல் ஊழலை ஊக்குவிக்கும் விதமாக தேர்தல் பத்திர திட்டம் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்தது.தேர்தல் பத்திரமாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.தேர்தல் நியாயமாக இருக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். மிசா காலத்தில் இந்திராகாந்தி அம்மையார் வெளிப்படையாக அனைத்தையும் செய்தார்.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய கொடுமைகள் இந்த ஆட்சியில் நடந்துள்ளது.பாஜக மீண்டும் வரப்போவதில்லை மக்கள் அவர்களை வரவிடமாட்டார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் எதிர்ப்பாக உள்ளனர். மோடி 2  பெரிய தொழிற்சாலைகளை கொண்டுவந்துள்ளார்.ஒன்று தினசரி பொய்களை செல்லும் தொழிற்சாலை மற்றொன்று பாஜகவில் சேரும் குற்றவாளிகளை சுத்தம் செய்யும் தொழிற்சாலை என குறிப்பிட்ட அவர் எதேச்சை அதிகாரம் வீழவும் ஜனநாயகம் காக்கப்படவும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூஸூக்கு கைசின்னத்தில் வாக்களியுங்கள்” என கூறினார்.
   
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget