வாக்காளர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் வேட்பாளர்
கரூர் நாடாளுமன்றதொகுதியில் நாம் தமிழர் கட்சியின் 2வது முறையாக வேட்பாளராக மருத்துவர் கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார்.வாக்காளர்களை சந்தித்து மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கு கேட்டு வருகிறார்.
கரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மருத்துவர் கருப்பையா வாக்காளர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 2வது முறையாக வேட்பாளராக எலும்பு முறிவு மருத்துவர் கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக தொகுதிக்குள் பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கு கேட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆண்டான்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், ஆண்டான் கோவில், காயத்ரி நகர், ரெட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஆதரவாளர்களுடன் பிரச்சார வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கினை சேகரித்தார்.
அப்போது, ஆண்டான் கோவில் பகுதியில் நடக்க முடியாமல் கால் வீக்கத்துடன் இருந்த முதியவருக்கு கால் வீக்கம் குறித்து கேட்டறிந்ததுடன், எதனால் ஆச்சு என கேட்டதுடன், ஆலோசனைகளை வழங்கினார். அதே போன்று 3 சக்கர சைக்கிளில் சென்ற முதியவருக்கு காலில் என்ன பிரச்சினை என கேட்டதுடன், அதற்கான வழிமுறைகளை சொல்லிச் சென்றார்.