மேலும் அறிய
Advertisement
Lok Sabha Election 2024: இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது - அண்ணாமலை
விரைவில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது என தேனியில் அண்ணாமலை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேனியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், ”விரைவில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது எனவும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம்தான் உள்ளனர். ஜூன் 4க்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் ஒப்படைக்கப்படும்.
காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களவை தேர்தலில் காண்ட்ராக்டர்களுக்குதான் எடப்பாடி பழனிசாமி சீட் ஒதுக்கியுள்ளார். யார் எட்டப்பன் என்பதில் அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். டிடிவி தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால்தான் அவரை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார். ” என குறிப்பிட்டார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion