மேலும் அறிய

திருடர் கூட்டத்தின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருடர் கூட்டத்தின் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு பிரதமர் தமிழகம் வருவது பிடிக்கவில்லை. எனவே, வேடந்தாங்கல் பறவையை போல வருகின்றார் என கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதி அருகே உள்ள தென்திருப்பதி சாலை நான்கு ரோடு சந்திப்பு மைதானத்தில் பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜகவின் கோயம்புத்தூர் வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சார சிறப்புரை  மேற்கொண்டார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திருடர் கூட்டத்தின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

தேயிலைக்கு உரிய விலை

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, ”வரலாற்றில் முதல் முறையாக மேட்டுப்பாளையம் பகுதிக்கு பிரதமர் வந்து இருக்கின்றார். பிரதமர் முன்னிலையில் எனது வாக்குறுதிகளை சொல்கின்றேன். தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் கோவை இடையே உள்ள ரயில்பாதை இரட்டைரயில் பாதையாக்கபடும். நிலக்கடலை, பாக்கு, கருவேப்பிலை புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். காட்டு பன்றியால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாண்டியாறு புன்னம்புழா ஆற்றை பவானி ஆற்றுடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

திருடர் கூட்டத்தின் தலைவர் ஸ்டாலின்

இதனை அடுத்து பேசிய அண்ணாமலை, ”திருடர் கூட்டத்தின் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு பிரதமர் தமிழகம் வருவது பிடிக்கவில்லை. எனவே, வேடந்தாங்கல் பறவையை போல வருகின்றார் என கூறியுள்ளார். அவர் சொன்னதை நாங்கள் ஏற்கிறோம். ஒரு பறவையை போல நம்மிடம் அடைக்கலம் தேடி வருகிறார். கோபாலபுரம் பெருச்சாளிகளை போல ஒழியவில்லை. ஒரு பொம்மை முதல்வராகத்தான் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். முதல் 10 நாள் கூட்டணி பிரச்சாரம் செய்பவர்கள், கடைசி 10 நாளில் சம்பாதித்த காசை இறக்குவார்கள். இதுதான் திமுக ஸ்டைல். திமுகவினர் யாராவது பணம் கொடுத்தால் அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முக்குத்தி,தோடு கொடுத்தால் அது ஊழல் செய்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் மோடி. தமிழ் மொழியின் மகத்துவத்தை உலகம் முழுவதும் பிரதமர் பரப்பி வருகிறார். 543 உறுப்பினர்களில் மோசமான உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான். அவர் டெபாசிட் வாங்க கூடாது. அடுத்த 7 நாட்கள் கடுமையாக நாம் உழைப்போம். வீடு வீடாக ஏறி திமுகவின் அவலங்களை எடுத்துச் சொல்லுங்கள்” எனக் கூறினார்.

மேலும் படிக்க : திமுகனாலே வெறுப்பு அரசியல் தான் - கோவையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு

'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!

Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

ABP Premium

வீடியோ

Seeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?

NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்

Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

Embed widget