மேலும் அறிய
Advertisement
Lok Sabha Election 2024: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டி - முழு விவரம் இதோ
இருவர் கேட்கும் சின்னத்திற்கு முதலில் வேட்புமனு தாக்கல் செய்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20.03.2024 தேதி முதல் 27.03.2024 வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுத்தாக்கலின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தமாக 49 பேர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை 28 ஆம் தேதி நடைபெற்றபோது பல்வேறு காரணங்களுக்காக 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 37 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டி
இந்நிலையில், வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு இன்றைய தினம் 30.03.24 அனுமதிக்கபட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ததில் 6 மனுவை திரும்ப பெற்றதால் திருவண்ணாமலை நாடாளுமன்றcதொகுதிக்கு 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முன்னுரிமை அடிப்படையில் சின்னங்கள்
திமுக கூட்டணியில் உள்ள திமுக சார்பில் போட்டியிடும் சி.என். அண்ணாதுரைக்கு சூரியன் சின்னமும், அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாளுக்கு இரட்டை சின்னமும், பாஜக சார்பில் போட்டியிடும் அஸ்வதாமனுக்கு தாமரை சின்னமும், நாம் தமிழர் வேட்பாளர் ரமேஷ் பாபுக்கு ஒலி வாங்கி மைக் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே சின்னத்தை இருவர் கோரி இருந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் முதலில் யார் வேட்புமனு தாக்கல் செய்தர்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சின்னங்கள் வழங்கப்பட்டது .
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion