Watch Video | ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை என புகார் தெரிவித்த பெண்கள் - அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சொன்ன பதில்
மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் கூறிய அவர் கோரிக்கை வைத்த பெண்களிடம் ஏம்மா ஏன் டென்ஷன் ஆகுற என்று கேட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் நழுவி சென்றார்
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் அதிமுக , தி மு க , சுயேச்சை 2 பேர் என 4 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் 11 வார்டுகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பள்ளத்தூரில் நடந்தது இதில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் கூட்டணி கட்சியினருக்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை என புகார் தெரிவித்த பெண்கள் - அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பண் சொன்ன பதில் pic.twitter.com/bb5XL5XwAo
— Kathiravan (@kathiravan_vk) February 10, 2022
அறிமுக கூட்டம் முடிந்து அமைச்சர் மேடையில் இருந்து இறங்கி வரும் போது கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி ஒழுங்காக வழங்குவதில்லை, ரேசனுக்கு வரும் அரசி பின்பக்கமாக கடத்தப்பட்டு அரிசி ஆலைக்கு போகுது ரேஷன் கடையில் பொருட்கள் எதுவும் முறையாக வழங்குவதில்லை மோடி அரிசி இல்லை என்கின்றனர் என்று அடுக்கடுக்கான புகார்களை அமைச்சரை சூழ்ந்துகொண்டு கூறினர். மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் கூறிய அவர் கோரிக்கை வைத்த பெண்களிடம் ஏம்மா ஏன் டென்ஷன் ஆகுற என்று கேட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் நழுவி சென்றார்.
சுயேச்சைக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டு வந்த திமுக நிர்வாகியை அமோகமாக வரவேற்று அசத்திய மக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பேருராட்சி 18வார்டுகளில் திமுகவினர் தனித்து 16 வார்டுகளில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு உள்ளனர் இதில் 7வது வார்டு பகுதி சார்பாக சுயேட்சை வேட்பாளர் ரபிக் என்பவர் நிறுத்தப்படுகிறார்.
சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து ஓட்டு கேட்க வந்த திமுக மாவட்ட துணை செயலாளருக்கு ஆதரவாளர்கள் அளித்த அமோக வரவேற்பு#LocalElections2022 #Sivagangai #DMK pic.twitter.com/vRoFJMldHQ
— Kathiravan (@kathiravan_vk) February 10, 2022
இவருக்கு ஆதரவாக ஒட்டு சேகரிக்க 7வது வார்டு கிழக்கு தெரு பகுதியில் சுயேட்சை வேட்பாளர் ரபிக்க்கு ஒட்டு சேகரிக்க வந்த திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து மேள தாளத்துடன், இருபக்கமும் பூக்கள் தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் ரபிக், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் வியப்பு அடைந்தனர். எப்போதும் வார்டுக்கு வந்தவர்கள் தான் வாக்காளர்களை வியக்க வைப்பார்கள் ஆனால் 7வது வார்டு கிழக்கு தெரு மக்கள் திமுக மாவட்ட துணை செயலாளரையும், வேட்பாளரையும் வியக்க வைத்தது இங்கு தான்
பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்- அதிமுகவினருக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவுரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி பேசினார்., அப்போது பேசிய அவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியை கைப்பற்ற வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய ஜெயலலிதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி அனைத்து கருத்துக்கணிப்பிலும் அதிமுக வெற்றி பெறும் என தகவல் வருகிறது. 33 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும்.
ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு கலை அறிவியல் கல்லூரி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அனைத்து பகுதிக்கும் கூட்டு குடிநீர் கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. வெற்றி பெற்ற நகராட்சி பட்டியலில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருக்கிறது. அதிமுக ஆட்சியை தை மாதம் முதல் புகழ ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எஃகு கோட்டை; பந்தா பண்ணாமல், சண்டை போடாமல் 10 பேர் மட்டுமே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் அதைதான் மக்கள் விரும்புகிறார்கள். ஆண்டாள் அவதரித்த ஆன்மீக பூமி ஸ்ரீவில்லிப்புத்தூர். அதிமுக விற்கு அருமையான அற்புதமான எதிர்காலம் உள்ளது என பேசினார்.