மேலும் அறிய

Local body elections | இன்று எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் நாளை எங்களுக்கு நண்பர்கள் ஆகலாம் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

’’காலை மாலை இரு வேளைகளிலும் 1 மணி நேரம் சென்று வாக்காளர்களிடம் பேசி, வாக்கு சேகரித்தால் வெற்றி பெற்று விடலாம்’’

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் ராம ராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் கா அறிவழகன், என் ஆர்.வி.எஸ் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்காக பணிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Local body elections | இன்று எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் நாளை எங்களுக்கு நண்பர்கள் ஆகலாம் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

பொறுப்பாளர்களின் ஆலோசனைகளை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.  ஆண் வேட்பாளர்கள் தன்னுடைய தாய் மனைவியையும், பெண் வேட்பாளர்கள் தன்னுடைய கணவனை அழைத்து கொண்டு வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டிற்கு சென்று, அதிமுகவின் சாதனைகள் பற்றி பேச வேண்டும். இது ஒன்றும் எம்எல்ஏ, எம்பி தேர்தல் கிடையாது. காலை மாலை இரு வேளைகளிலும் 1 மணி நேரம் சென்று வாக்காளர்களிடம் பேசி, வாக்கு சேகரித்தால் வெற்றி பெற்று விடலாம் என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைத்திலிங்கம் கூறுகையில், அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது. இன்று நட்புணர்வுடன் உள்ள கட்சிகள் நாளை எதிர்க்கட்சி ஆகலாம். இன்று எதிர்க்கட்சிகள் ஆக உள்ளவர்கள் நாளை எங்களது கூட்டணியில் இருக்கலாம். தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகள்  எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தாம் தான் கொண்டு வந்ததாக பேசி வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக பயன் அடைய திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் பேசுவது தவறானதாகும்.

Local body elections | இன்று எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் நாளை எங்களுக்கு நண்பர்கள் ஆகலாம் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சி. இந்த அரசாணை மூலம் அரசு பள்ளியில் படித்த 435 மாணவ மாணவிகளின் கல்வி கட்டணம் விடுதி கட்டணங்களை அரசே ஏற்று அவர்கள் மருத்துவ படிப்பை பயின்று வருகின்றனர்.  இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 11 மருத்துவ கல்லூரிகள் அமைந்துள்ளது. மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்க பல திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக ஆட்சி. இதேபோல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2500 பொங்கல் பரிசு வழங்கியது அதிமுக ஆட்சி. எனவே பொதுமக்கள் பயனடையும் வகையிலும் மாணவ மாணவிகளின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி. அதிமுக சார்பில் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அனைத்து இடங்களையும் அதிமுக கைப்பற்றும் என்றார்.

Local body elections | இன்று எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் நாளை எங்களுக்கு நண்பர்கள் ஆகலாம் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

இது குறித்து வேட்பாளர்கள் கூறுகையில், தேர்தல் நடைபெறுகின்றதால், கட்சியிலிருந்து செலவிற்கு பணம் கொடுப்பார்கள். நேர்காணலின் போது, பணம் தருவது பற்றி பேசிய போது, பார்க்கலாம் என்றனர். ஆனால்  இது வரை தரவில்லை. நடந்த கூட்டத்தின் போது, வைத்திலிங்கம் இது பற்றி பேசுவார் என்று காத்திருந்தோம். அதை பற்றி மட்டும் பேசாமல், மற்றவைகள் பற்றி பேசினார். அதிமுகவிலுள்ள பெரும்பாலான வேட்பாளர்கள், வட்ட செயலாளர்கள் கடந்த ஆட்சியின் சம்பாதிக்க வில்லை. நகர ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் மட்டுமே சம்பாதித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒதுங்கி விட்டார்கள். தேர்தல் செலவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்பியபடி சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget