மேலும் அறிய

Local body election | அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேச்சு

அதிமுக அரசு வாக்குறுதி அளித்த திட்டங்களையும் வாக்குறுதி அளிக்காத பல நல்ல திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி வந்துள்ளது

கும்பகோணத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கானஅறிமுகம் மற்றும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தலைமை  வகித்தார்.  நகர செயலாளர் ராம. ராமநாதன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  முன்னாள் எம்.பி. பாரதிமோகன் ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமா,ர்  என். ஆர். வி. எஸ் செந்தில், சோழபுரம் அறிவழகன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் சாதிக் அலி, நகர செயலாளர் பிஎஸ் சங்கர், முன்னாள் எம்எல்ஏ ராம்குமார், தவமணி ,இளமதி சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், அதிமுக என்கிற இயக்கம் மாபெரும் இயக்கமாக இருந்து வருகிறது. அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு 16 ஆண்டுகள் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்து பல்வேறு தொலை நோக்கு திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார்.

Local body election | அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேச்சு

ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம் பல்வேறு  சோதனைகளை கடந்து இயக்கத்தை அரும்பாடுபட்டு காப்பாற்றி வந்துள்ளார். அதன்மூலம் இன்று ஒரு கோடிக்கு மேல் தொண்டர்கள் நிறைந்த மாபெரும் இயக்கமாக அதிமுக திகழ்ந்து வருகிறது. அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என்கிற நிலையை ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவர் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் தனது ஆட்சி காலத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றி கொடுத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

நல்ல ஆட்சியாளர்கள் ஒரு மனிதனுக்கு தேவையான உண்ண உணவு உடுத்த உடை இருக்க  இருப்பிடம் ஏற்படுத்தி தர வேண்டும். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கினார்.  இதே போல் ஏழை எளிய மக்களுக்கு 5 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ஆடைகளை வழங்கினார்.

ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டங்களை ஏற்படுத்தினார். தாலிக்கு தங்கம் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தை 2016ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் 8 கிராம் ஆக உயர்த்தி அறிவித்ததை ஜெயலலிதாவின் வருகைக்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வாக்குறுதி அளித்தபடி தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் தங்கத்தை ஏழை எளிய பெண்களுக்கு  வழங்கினார். 500 ரூபாயாக இருந்த ஓய்வூதியத் திட்டத்தை ரூபாய் 1000 ஆக உயர்த்தி வழங்கினார். 2006ஆம் ஆண்டு பெண்களின் பேருகால நிதியுதவியாக ரூ. 6000 அறிவித்த நிலையில் அடுத்த தேர்தலில் இந்த நிதியுதவியை ரூ. 12000 ஆகவும் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 18,000 ஆகவும் உயர்த்தி அறிவித்து அதனை வழங்கவும் செய்தார்.

Local body election | அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேச்சு

எனவே அதிமுக அரசு வாக்குறுதி அளித்த திட்டங்களையும் வாக்குறுதி அளிக்காத பல நல்ல திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி வந்துள்ளது. மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை பெறுவதற்கு 33 ஆயிரம் கோடி ரூபாயை கல்வித்துறைக்கு ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் தமிழகத்தில் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 53 சதவீதமாக உயர்ந்தது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து ஏராளமான தொழிற்கூடங்கள் ஏற்படுத்தியதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது இந்தியாவிலேயே அதிக நெல் உற்பத்தியில் முதலீடு செய்த ஒரே மாநிலம் தமிழக மட்டுமே. காவிரி நதிநீர் பிரச்சினையை தொடர்ந்து அரசிதழில் வெளியிட்டார்.

எங்களை போன்ற மாவட்ட மாநில நிர்வாகிகள் சட்டசபை உறுப்பினர்களை தேர்தலை சந்தித்த போது நாங்கள் செய்த செயல்களை சொல்லி வாக்கு கேட்டது இல்லை மாறாக ஜெயலலிதா வை முதலமைச்சராக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு தான் வாக்கு சேகரித்து வெற்றியும் பெற்றுள்ளோம். எனவே எங்களது வெற்றி ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி. தற்போது நடைபெற உள்ள தேர்தல் தொண்டர்களுக்கான தேர்தல். பேரூராட்சி வார்டு உறுப்பினர்களாக நகராட்சி வார்டு உறுப்பினர்களாக தலைவராக மாநகராட்சி வார்டு உறுப்பினர்களாக தலைவராக தொண்டர்கள் போட்டியிடும் தேர்தல். எனவே நமது அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி இந்தத் தேர்தலில் உள்ளாட்சியில் சிறந்த நிர்வாகம் அமைய பொது மக்களின் அதிக அளவு வாக்குகளை பெற்று நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget