மேலும் அறிய

Local Body Election 2022 | கரூர் : அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..

கரூரில், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை.

கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், எதுவும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்த ஒரு பொருளோ பணமோ கைப்பற்றப்படவில்லை என திரும்பிச் சென்றனர்.

Local Body Election 2022 | கரூர் : அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..

இந்த நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் திடீரென்று அதிமுக அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டதாக கூறி, போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி காவல்துறையிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர். 

Local Body Election 2022 | கரூர் : அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..

இந்நிலையில், அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பறக்கும் படை தாசில்தார் கட்சி அலுவலகத்தில் சோதனை செய்தார். முடிவில், எந்த பரிசு பொருளும் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து மீண்டும் அலுவலகத்தில் சோதனை செய்து எங்களை மிரட்டினர். கரூர் மாநகராட்சிக்கு 2 லட்சம் ஹாட்பாக்ஸ் மற்றும் 1,000 ரூபாய் ஆளும் திமுக கட்சி கொடுத்து வருகின்றனர். அதை எந்த தேர்தல் பறக்கும் படையினரும் பிடிக்கவில்லை.

Local Body Election 2022 | கரூர் : அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..

கரூர், கோவையில் பணமழை கொட்டுகிறது. அதை காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யவில்லை. கோவையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை கைது செய்தனர். அதை போலே கரூர் மாவட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை திமுகவினர் வீடு புகுந்து மிரட்டுகின்றனர்.

Local Body Election 2022 | கரூர் : அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை..

அதிமுக வெற்றிபெற்றாலும். திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்போம். நீங்கள் செலவு செய்வது எல்லாம் வெட்டி செலவுதான் என அதிகாரிகளே வெளிப்படையாக வேட்பாளர்களிடம் தெரிவிக்கின்றனர்” என்றார்

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

”கரூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் மந்திராசலம் ஜனநாயக முறை படி தேர்தல் நடத்தமாட்டார். அவர் திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார். வெற்றி நியாயமாக இருக்காது. சட்டமன்ற தேர்தலில் கரூரில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களிடம் போலியான கொலுசுகளைக் கொடுத்து திருட்டுத்தனமாக வெற்றி பெற்று ஏமாற்றியவர். ஆகையால் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!

அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

Embed widget