மேலும் அறிய
Advertisement
Local body election | ஃபாஸ்ட் புட் போட்டும்; பரோட்டு சுட்டும் வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் சமையல் மாஸ்டர் ஆக மாறி, பாஸ்ட் புட் கடையில் சிக்கன் ரைஸ் போட்டும், இறைச்சி கடையில் கறி வெட்டி கொடுத்தும், பரோட்டா சுட்டு கொடுத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு முதன் முறையாக மாநகராட்சி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை வரலாற்றில் இடம்பிடிக்க திமுக, அதிமுக போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து பிரதான காட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஸ்ட் புட், இறைச்சி கடை , பரோட்டா சுட்டு கொடுத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் pic.twitter.com/MP2HA14L55
— Kishore Ravi (@Kishoreamutha) February 12, 2022
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - ‛75 சதவீதம் என்கிறார் ஸ்டாலின்... 50 சதவீதம் என்கிறார் உதயநிதி’ எத்தனை சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றியது திமுக?
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெரும்பாலான வேட்பாளர்கள் பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண் வேட்பாளர்கள் போட்டி போட்டு போட்டி போட்டுக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஆண் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் பாலாஜி கம்மாள தெரு, பவளவண்ண கோவில் மாட வீதி, புதிய ரயில்வே நிலையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது செல்லும் வழியில் உள்ள பாஸ்ட் புட் கடைகள் சமையல் மாஸ்டர் ஆக மாறி சிக்கன் ரைஸ் போட்டுக் கொடுக்கும், இறைச்சிக் கடையில் சிக்கன் கறி வெட்டி கொடுத்தும், சாலை ஓர சிற்றுண்டியில் பரோட்டா சுட்டு கொடுத்தும் வாக்காளர்கள் இடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion