இரவு நேரத்திலும் தொடரும் தீவிர பிரச்சாரம்..! காத்திருந்து வரவேற்பு கொடுக்கும் நிர்வாகிகள் ..!
அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு . பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு . பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் . அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்ட, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி 2024
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு , முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் , அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ ராஜசேகர் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆகியோர் சின்னத்திற்காக வாக்குகளை சேகரித்தனர். வேட்பாளருக்கு பூரண கும்ப மரியாதை க்ஷ வரவேற்பு அளிக்கப்பட்டது . தொடர்ந்து வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை குரலாக எழுப்புவேன் என உத்தரவாதத்தை முன்வைத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை கேட்டார்.
மறைமலைநகரில் உற்சாக வரவேற்பு
உடன் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக கொடிகளை கையில் ஏந்தியவாறு இரட்டை இலை சின்னத்திற்கு தொண்டர்கள் வாக்குகளை சேகரித்தனர். முன்னதாக மறைமலைநகர் பகுதியில் நிர்வாகிகள் ஏற்பாட்டில் ஜேசிபி முன் பகுதியில் ரோஜா பூக்களை இதழ்களை வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் மீது கொட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து , வேட்பாளர் தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டார்.
இரவு நேரத்தில் பிரச்சாரம்
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும், வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் இடங்களில் பொதுமக்களை திரட்டி காத்திருக்க வைப்பதிலும், நிர்வாகிகளுக்கு சிக்கல் இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை அதிக பிரச்சாரம் நிலை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் இரவு நேரங்களில் பொதுமக்களை சந்தித்து தங்களுடைய சின்னங்களுக்கு வாக்குகளை கேட்டு வருகின்றனர். அதேபோன்று இரவு நேரத்தில், பகல் நேரத்தை விட அதிக அளவு பொதுமக்களை வாக்கு சேகரிக்கும் இடத்திற்கு, அழைத்து வர முடிவதால் நிர்வாகிகளும் இரவு நேர பிரச்சாரத்தையே அதிக விரும்புகின்றனர். இதன் காரணமாக இரவு நேரங்களில் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதுபோக முக்கிய கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்கள் இல்லாமல், தனியாக சென்று வீடு தோறும் அவரவர் சார்ந்த கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளையும் சேகரித்து வருகின்றனர். ஒருபுறம் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம், கட்சி நிர்வாகிகள் தனியாக சென்று வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது.