மேலும் அறிய

காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

Kanchipuram DMK : காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கலைஞர் ,ஸ்டாலின் , கமல் வேடம் அடைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் கொடிகளை ஏந்தியவாறு வாகன மேற்கொண்டு வாக்குகளை பேரணி

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர்,  க. செல்வம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

சுடச்சுட உணவு

முன்னதாக காலையிலேயே கட்சி தொண்டர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு வெங்கடாவரம் பகுதியில் சுட சுட இட்லி மற்றும் சுடச்சுட கறி குழம்புகளுடன் காலை உணவு பரிமாறப்பட்டு பிரச்சாரத்தை துவங்கினார் . இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக கட்சி கொடிகளை ஏந்தி மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்த செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

தலைவர்களின் வேடமிட்டு பிரச்சாரம் 

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளான வேதாச்சலம் நகர் , பலவா நகர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி , எல்லப்பன் நகர் , செவிலிமேடு , உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . மேலும் பிரச்சாரத்தில் மக்களை கவரும் வகையில் , மறைந்த முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்  , மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வேடமிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார். வழியெங்கும் கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

தொடரும் பிரச்சாரம்

இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வேகவேகமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 6 சட்டமன்றத் தொகுதியை முழுவதும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதால் , ஒரு பகுதிக்கு 5 நிமிடத்திற்கு குறைவாகவே நேரத்தை ஒதுக்கி வாக்கு சேகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?

செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019 தேர்தல் நிலவரம் எப்படி ?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget