மேலும் அறிய

Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்

திராவிடக் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு எவ்விதச் சங்கோஜமும் இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் கலைஞர் அவர்களின் புன்னகையின் சாயலைக் காண்கிறேன் என கமல் பேசினார்

 திமுகவில் சேர சொல்லி கலைஞர் சொன்னார், எனக்கு 10 சீட் கொடுத்திருந்தாலும் திட்ட மாட்டேன், எதிர்க்கட்சியாக நான் யாரையும் பார்க்கவில்லை என சேலம் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளாற்

எதிர்காலத்திற்கான அரசியல் வருகை

பொதுக்கூட்டத்தில் கமல் பேசியதாவது இன்றைய சூழலில் நிலவும் போலி அரசியலுக்கும், மக்கள் நலன் சாராத போக்குகளுக்கும் எதிராக, எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வரப்போகும் அநீதிகளைத் தடுக்கும் நோக்கில் நான் இங்கு வந்துள்ளேன். தேர்தலை விட தமிழகத்தின் எதிர்காலமே முக்கியம் என்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்தை நான் முழுமையாக வழிமொழிகிறேன்.

இடஒதுக்கீடு மற்றும் தொகுதி சீரமைப்பு

தற்போது முன்வைக்கப்படும் 33 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு கவர்ச்சிகரமான தூண்டில்; அந்தத் தூண்டிலில் நாங்கள் சிக்க மாட்டோம். அதேபோல், தொகுதி சீரமைப்பு விவகாரத்தை தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் எனத் தள்ளிப்போடாமல், இப்போதே விவாதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

திராவிடக் குடும்பத்தில் ஒருவனாக...

திராவிடக் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு எவ்விதச் சங்கோஜமும் இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் கலைஞர் அவர்களின் புன்னகையின் சாயலைக் காண்கிறேன். திராவிடப் பல்லக்கைச் சுமக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பதவிக்காகவோ அல்லது அமரும் இருக்கைக்காகவோ வரவில்லை; தமிழகத்திற்காகப் பதற வேண்டிய நேரம் இது.

கல்வி அறிவில் தமிழகத்தின் முன்னோடித் திட்டம்

33 விழுக்காடு எனும் தூண்டில் பற்றி இங்குள்ளவர்களுக்குப் புரிய வைத்து விடலாம். ஆனால் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்த அளவு கல்வியறிவு கிடையாது. இந்தியாவிலேயே 33 சதவீதத்திற்கும் மேலாகப் பெண்கள் உயர்கல்வி கற்பது தமிழ்நாட்டில்தான். மற்ற மாநிலங்களுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுக்கும் பொறுப்பு தமிழகத்திற்கு உண்டு. பல்வேறு துறைகளில் நாம் முன்னிலை வகிக்கிறோம் என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் கசப்புடன் இருந்தாலும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

விமர்சனமும் அங்கீகாரமும்

யாரையும் திட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை. எனக்கு 10 தொகுதிகள் கொடுத்திருந்தாலும் நான் யாரையும் விமர்சித்திருக்க மாட்டேன். இங்கு எவரையும் நான் எதிர்க்கட்சியாகப் பார்க்கவில்லை. முன்பு நாங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஏற்று, அவற்றை முதல்வர் நடைமுறைப்படுத்திய காரணத்திற்காகவே நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அன்றே திமுகவில் சேரச் சொல்லி கலைஞர் அவர்கள் என்னை அழைத்தார்; இன்று அந்தப் பெரிய குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைந்துவிட்டேன்.

70 காலப் பாரம்பரியம்

ஒரு கூட்டத்தை எவ்வளவு கட்டுப்பாட்டுடன், விபத்துகளின்றி நடத்த வேண்டும் என்பதற்கு திமுகவே முன்னுதாரணம். மக்களைச் சரியாக வழிநடத்தி, அவர்களின் நன்மதிப்பைப் பெற்றால் வாக்குகள் தானாக வரும். வெறும் கூட்டங்கள் மட்டுமே குடும்பமாகி விட முடியாது; அவை கலைந்துவிடும். ஆனால், இது 70 ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட வலிமையான குடும்பம். எனது இந்தப் பேச்சு இன்றைய தற்காலிக அரசியலுக்கானது மட்டுமல்ல, இது தமிழகத்தின் நிரந்தர நலனுக்கானது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget