மேலும் அறிய

Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா - மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - பங்கேற்கிறார் ஸ்டாலின்

Lok Sabha Election 2024: மும்பையில் நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Lok Sabha Election 2024: மும்பையில் இன்று நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்துடன், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முடிவடைய உள்ளது.

ராகுல் காந்தியின் யாத்திரை:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022ம் ஆண்டு, தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி,  வடக்கே ஜம்மு காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை சந்தித்தார். அதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பாஜக ஆளும் மாநிலங்கள் வழியான அவரது பயணத்தின் போது, சில இடங்களில் எதிர்ப்புகளும் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது.

I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம்:

இந்நிலையில்,  ராகுல் காந்தியில் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை பயணம் இன்றுடன் முடிவடைகிறது. அதையொட்டி, மும்பையில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்த ராகுல் காந்தி, நேற்று இரவு 8 மணியளவில் அம்பேத்கர் சமாதியான சைத்யபூமியில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து, இன்று மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை ராகுல் காந்தி நடைபயணம் செல்கிறார். அங்கு, ராகுல் காந்தியின் யாத்திரையின் முடிவாக, நடைபெறும் பொதுக்கூட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் பொதுக்கூட்டம் I.N.D.I.A. கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக மும்பை சென்றுள்ளார். 

முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரா, பீகார்:

48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாகவு, 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் 7 கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணிக்கு 80 எம். பி. க்களை இந்த மாநிலங்கள் அள்ளிக் கொடுத்தன. ஆனால், தற்போது இந்த மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு ஒரு எதிர்ப்பு மனநிலை நிலவுவதால், அதனை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய I.N.D.I.A. கூட்டணி முயல்கிறது. இதற்கு இன்றைய பொதுக்கூட்டம் பெரிதும் உதவும் என இந்த கூட்டணி தலைவர்கள் நம்புகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget