மேலும் அறிய

TN Urban Election Results 2022 : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஒசூர் மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

TN Urban Local Body Election Results 2022; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒசூர் மாநகராட்சி மேயர் யார்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஒரு சட்டமன்றத் தொகுதி உள்ளது. இந்த மாநாகராட்சியில் ஆண்கள் :1,11,284 பெண்கள் : 10593 திருநங்கைகள் : 95 மொத்தம் 217292 மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையடுத்து 55 இடங்களில் 248 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் வாக்குபதிவு நடைபெற்றது.

ஓசூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக 42 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் ,சி.பி.எம் 2 வார்டுகளிலும்,பாஜக 30 வார்டுகள், சிபிஐ 3 வார்டுகளிலும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் 1 வார்டுகளிலும் , பாமக 20 வார்டுகளிலும், நாம் தமிழர் 31 வார்டுகளிலும், மக்கள் நீதி மையம் 5 வார்டுகளிலும் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 13 வார்டுகளிலும் போட்டியிட்டன

TN Urban Election Results 2022 : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஒசூர் மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

இந்திய ஜனநாயக கட்சி 1 வார்டுகளிலும் சுயேட்சைகள் 72 நபர்கள் உள்பட 274 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர்.  திமுக கூட்டணி கட்சியான சிபிஐ, சிபிஎம் வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் திமுக போட்டியிடவில்லை. இதில் ஓசூர் மாநகராட்சியில் 44 வார்டுகளில் அதிமுகவும் மற்றும் 42 வார்டுகளில் திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதையடுத்து நாளை 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் வகையில், ஓசூர் மாநகராட்சியில் ஒரு மையத்தில் மட்டும் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பதிவான வாக்குகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

TN Urban Election Results 2022 : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஒசூர் மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

மேயர் பதவி குறித்து திமுக தரப்பில் ஒரு ஆண் 7-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தையா மற்றும் ஒரு ஆண் 27 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியா அதேபோல் அதிமுக சார்பில் ஒரு ஆண் 27வது வார்டில் போட்டியிடம் நாராயணன் வேட்பாளர் மற்றும் 14 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ராமு மற்றும் வேட்பாளர் பாலநாரயணன் தேர்ந்தெடுக்க உள்ளதாக ஓசூர் மாநகராட்சியில் கூறப்படுகிறது.

இரண்டு பேரூராட்சிகளை இணைத்து, புதிதாக உருவாக்கப்பட்ட ஓசூர் மாநகராட்சிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.வாக்குறுதிமுதல் முறையாக நடக்கும் மாநகராட்சி தேர்தல் என்பதால், வேட்பாளர்களிடம் இருந்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் என, பலதரப்பட்ட கவனிப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வேட்பாளர்களும், கவனிப்பில் மட்டுமின்றி, வாக்குறுதிகளையும் வாரி வழங்கியதால், எதிர்பார்த்த அளவு வாக்காளர்கள் ஓட்டுப்பதிவிட வருவர் என நம்பப்பட்டது.

தேர்தல் நாளன்றும், பல வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களை வைத்து, வீடு வீடாக சென்று வாக்காளர்களை ஓட்டுப்போடவருமாறு அழைத்து வந்து பலர் ஓட்டளித்தனர். இதனால், ஓசூர் மாநகராட்சி - 63.97 சதவீதம் ஓட்டுக்களே பதிவானது.

TN Urban Election Results 2022 : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஒசூர் மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

வேலூர் மாநகராட்சியில் காட்பாடி மண்டலம் 1- ல் உள்ள 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியதால் மீதம் உள்ள 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 55 வார்டுகளில் அதிமுக ,திமுக நேருக்கு நேர் களம் கண்டது. முடிவடைந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1,27,848 பேரும், பெண் வாக்காளர்கள் 1,33,487 பேரும், மூன்றாம் பாலித்தார் 5 பேர் என மொத்தம் 2,61,340 பேர் வாக்களித்துள்ளனர். 58 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக-55, அதிமுக-55, பா.ஜ.க-35, நாம் தமிழர்-40, காங்-3, தேமுதிக 16, பா.ம.க-20, சுயேச்சை 83 என உள்ளிட்ட 354 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் 58 வார்டுகளில் மொத்தம் 419 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 419 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வேலூர் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையம் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நாளன்று அரசால் அனுமதிக்கப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க உள்ளனர்.

மேயர் பதவி பெண் பொதுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் விமலா சீனிவாசன், புஷ்பா ஆகிய இருவருக்கு மேயராக வாய்ப்புள்ளது. அதிமுக தரப்பில் அருணா விஜயகுமார், பொற்செல்வி ஜெயச்சந்திரன் ஆகிய இருவருக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது.

TN Urban Election Results 2022 : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஒசூர் மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 67 ஆயிரத்து 968 ஆண் வாக்காளர்கள், 74 ஆயிரத்து 155 பெண் வாக்காளர்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1 லட்சத்து 42 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க, அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 271 நபர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 35 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றனர்.

இதனால் திருவண்ணாமலை நகராட்சியை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் திமுக சார்பில் அமைச்சர் யா எவா வேலு மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை செய்தி சேகரித்தனர் இதில் இருவருக்கும் இடையே திருவண்ணாமலை நகராட்சி தாங்கள்தான் கைப்பற்ற வேண்டும் என இருமுனை பிரச்சாரம் சூடு பிடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை நகராட்சியில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் நகராட்சி 26-வது வார்டில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது முதல் முறையாக இந்த தேர்தலில் பெண் நகரமன்ற தலைவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை நகராட்சியில் வெற்றி பெற்று யார் நகராட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்பது தேர்தலுக்குப் பின்னரே தெரியவரும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
China America Venezuela: “சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
“சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Embed widget