மேலும் அறிய

Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்

Exit Poll Results: தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்றங்களிலும் கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் குறித்து கணிக்கப்பட்டதும், நடந்ததும் என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் வெளியாகிறது. மேற்கு வங்கத்தின் இறுதி மற்றும் 2வது கட்ட தேர்தல் முடிவுகள் நாளை வெளியானவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகிறது.

இந்த சூழலில், கடந்த தேர்தலில் மேற்கண்ட 5 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்? எவ்வளவு ஒற்றுமை? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாடு:

பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு திமுக கூட்டணி 160 முதல் 190 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டது. தனிப்பெரும்பான்மையாக திமுக 118 தொகுதிகள் வெல்லும் என்று கணிக்கப்பட்டது. அதிமுக 46 முதல் 68 தாெகுதிகள் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகள் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையாக 133 தொகுதிகள் வெற்றி பெற்றது. அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தனியாக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கேரளா:

கேரளாவில் இடது சாரி முன்னணி மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 104 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 20 முதல் 36 தொகுதிகள் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது. சி வோட்டர் இடதுசாரி கூட்டணி 71 முதல் 77 தொகுதிகள் வெல்லும் என்றும், ஐக்கிய ஜனதா தளம் 62 முதல் 68 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணித்தது.

தேர்தல் முடிவுகளில் இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 128 முதல் 176 தொகுதிகள் கைப்பற்றும் என்றும், பாஜக 109 முதல் 148 தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது. சி வோட்டர் திரிணாமுல் காங்கிரஸ் 152 தொகுதிகள் முதல் 164 தொகுதிகளும், பாஜக 109 முதல் 121 வரை கைப்பற்றும் என்று கருதப்படுகிறது.

ஆனால், தேர்தல் முடிவுகளில் 215 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளைக் கைப்பற்றியது. 

அசாம்:

வடகிழக்கு மாநிலத்தில் முக்கியமான அசாம் மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 58 முதல் 85 தொகுதிகளையும், காங்கிரஸ் 40 முதல் 66 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. சி வோட்டார் பாஜக 58 முதல் 71 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 53 முதல் 66 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை் கைப்பற்றியது.

பாண்டிச்சேரி:

யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் பாஜக என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 24 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. சி வோட்டர் பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 19 முதல் 23 தொகுதிகளையும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 6 முதல் 10 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கணித்திருந்தது. தேர்தல் முடிவுகளில் 2021ம் ஆண்டு பாஜக - என்ஆர்காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget