Erode East Bypoll 2025 LIVE: ஈரோடு இடைத்தேர்தல் 2025... விறு விறு வாக்குப்பதிவு! முழு தகவல் உடனுக்குடன்
Erode East Bypoll 2025 LIVE Updates:காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Background
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு 2600 காவல் துறையினர் உட்பட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவதொடங்கி நடைப்பெற்றுப் வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இதைத்தொடர்ந்து இவரும் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதன் காரணமாக காலியான சட்டமன்றத் தொகுதியில் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலகுவதாக அறிவித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நேற்றைய முன் தினம் முதல் இன்று வரை 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
விறுவிறுப்பாக வாக்களிக்கும் வாக்காளர்கள்! அனல்பறக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் மதிய வேளையிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல் - பகல் 01 மணி நிலவரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பகல் 01 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு





















