EPS slams Rahul Gandhi: ’’அதிமுகவை யாருக்கும் அடிமையில்லை..” விமர்சித்த ராகுல்! பதிலடி கொடுத்த ஈபிஎஸ்
பாஜகவின் பிடியில் அதிமுக உள்ளது என பேசிய ராகுல் காந்திக்கு அதிமுக யாருக்கும் அடிமையில்லை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செங்கோடு, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்தபடியாக ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈபிஎஸ் பேச்சு
அப்போது இபிஎஸ் பேசியதாவது;’’நான் ஈரோட்டில் தான் படித்தேன் என்பதால் இந்த ஊர் எனக்கு அத்துப்படி. உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நடப்பது சட்டமன்றத்தேர்தல். ஆனால், இது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல் என்கிறார் ஸ்டாலின். அவருக்கு மட்டும் டெல்லி மேல் பாசமாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் திராணியில்லாமல் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியின் குறைகளைச் சொன்னால் பதில் சொல்லத் தயார் என்று நான் பல முறை சொல்லிவிட்டேன்.
ராகுலுக்கு பதிலடி:
நேற்று ராகுல்காந்தி பொன்னேரியில், பாஜகவின் பிடியில் அதிமுக உள்ளது என்று பேசினார். அதிமுக யாருக்கும் அடிமையில்லை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தலைவர், அம்மா காலத்திலும் இப்போதும், நாங்கள் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதற்கே கூட்டணி அமைத்திருக்கிறோம். எங்களுடைய இயல்பான கூட்டணி.
திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? 2021 தேர்தலில் எந்தக் கட்சிகளெல்லாம் இருந்ததோ, அதே கட்சிகள்தான் இருக்கிறது, ஒரே ஒரு கட்சி, அதுவும் அரை பெர்சன்ட் வாங்கிய கட்சி தான் புதிதாக சேர்ந்திருக்கிறது. ஆனால் வெளியில் பில்டப். பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு அல்வா கொடுத்துவிட்டார். ஒரு சீட்டைக் குறைத்தார். புதிய அரை பெர்சன்ட் கட்சிக்கு 10 சீட். இரண்டரை பெர்சன்ட் கட்சிக்கு 5 சீட். அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்று மதிமுக பிரமுகர் சொன்னார். அப்படியான கூட்டணிதான் திமுக.
அப்போ பாஜக நல்ல கட்சி!
எங்கள் கூட்டணி அப்படியல்ல, எங்கள் கட்சி அலுவலகத்தில் 2 மணி நேரத்தில் தொகுதிகளை அறிவித்தோம். திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு 20 நாட்கள் நடந்தது. வேறு வழியின்றி டெல்லிக்குச் சென்று சோனியா, ராகுலை கெஞ்சிக் கூத்தாடி கூட்டணி அமைத்தனர். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சி பற்றி எதுவும் பேச முடியாது. அதனால் இபிஎஸ் ஊர்ந்துக்கொண்டு போனார் என்பார், இதையா மக்கள் கேட்டார்கள்? ஸ்டாலின் மாதிரி வெளிநாடு சென்று சைக்கிள் ஓட்டவில்லை. நான் வெளிநாடு போனேன், திட்டங்களைக் கொண்டுவந்தேன். அதிமுக முகமூடியுடன் பாஜக வருகிறது என்கிறார். அப்படி என்றால் 1999ல் திமுக முகமூடியுடன் பாஜக வந்ததா? யாருடன் கூட்டணி? 1999, 2001 ஆகிய தேர்தல்களில் கூட்டணி வைத்து மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர், அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியா?
ஸ்டாலினும், உதயநிதியும் மோடி மோசமானவர் என்கிறார்கள். உதயநிதியின் தாத்தா கருணாநிதியோ, மோடி நல்லவர் என்று பேட்டி கொடுத்தார். அப்பவே சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டார். நான் யார் தெரியுமா கருணாநிதி மகன் என்பார், உங்கள் அப்பாதானே சொன்னார், உங்க அப்பா வழியில் நடக்க வேண்டியதுதானே..? பார்த்து, யோசித்துப் பேசுங்கள்.
கண்ணில் விரல் விட்டு ஆட்டினேன்:
நான் சட்டமன்றத்தில் இரண்டே முக்கால் மணி நேரம் பேசினேன், முதல்வர் எனக்கு பசிக்கிறது, பதில் எழுத வேண்டும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றார், சட்டமன்றத்தில் உங்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டினேன். எதிர்க்கட்சி என்ற முறையில் இதுவரை யாரும் இரண்டே முக்கால் மணி நேரம் பேசியதில்லை. மக்கள் பிரச்னைகளை பேசுவது எங்கள் கடமை. முன்பு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது 40 நிமிடத்தில் முடிப்பார், அவ்வளவுதான் சரக்கு, அதிமுக அரசை விமர்சிக்க முடியவில்லை என்றாஎ
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்




















