மேலும் அறிய

Eps Alert : ”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்

Eps Alert : திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த விழிப்போடு கண்காணித்து, முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற மே 4 ஆம் தேதி வாகுக எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாக்காளர்கள், கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று. தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும். கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில், பின்வரும் முக்கிய அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வாக்கு எண்ணிக்கை- கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.5.2026 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடைய அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, தேர்தல் நடத்தும் அலுவலரால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையுடன் (Identity Card) வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதமாக செல்லக்கூடாது.
  • வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு ஏற்றார்போல் முகவர்களை நாம் நியமித்திருக்கிறோம். அந்த முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நாற்காலிகளுக்குச் சென்று அமர்ந்துவிட வேண்டும். 
  • வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள், வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற வரையிலும், எக்காரணத்தைக் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது. மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்திட வேண்டும்.
  • தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
  • வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
  • வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், ஏற்கெனவே படிவம் 17C-ன்படி வாக்குப் பதிவு நாளன்று பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் சரியாக உள்ளதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள தேதியையும், நேரத்தையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாக்குப் பதிவு இயந்திரத்தின் சீல்களும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருந்தால் மட்டுமே, வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும், நீங்கள் குறித்து வைத்திருக்கின்ற வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் சரியாக அறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமுடன் பார்க்க வேண்டும்.
  • ஏதேனும் மாறுதல்கள் இருக்கின்றபட்சத்தில், வாக்கு எண்ணிக்கையை தொடராமல் தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலே தெரியப்படுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை, வாக்கு எண்ணும் மையத்தின் பிரதான மேஜையின் முன்பு அமர்ந்திருக்கின்ற வேட்பாளரின் தலைமை முகவரிடத்திலே தெரியப்படுத்தி, அதை எழுத்துப்பூர்வமாக வேட்பாளரின் சார்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலே கொடுத்து அதற்குண்டான ஒப்புகையை கட்டாயம் கேட்டுப் பெறவேண்டும். அதற்கான தீர்வு கிடைத்த பின்னர்தான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும், மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.
  • கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் (Counting Agent) அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வரவேண்டும்.
  • கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent-களும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். 

 

தலைப்பு செய்திகள்

Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
TN RAIN ALERT : இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Embed widget