வாக்காளர்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
" வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார் "
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 04 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் இன்று (27.10.2023) வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் ( kanchipuram district electoral list )
இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி வாக்காளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான 2024-க்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெளியிடப்பட்டது.
ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,24,581. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,44,802, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,79,597, இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 182.
புதிய வாக்குச்சாவடி மையங்கள் ( New polling centers )
மேலும் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 29, திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் (27.10.2023)ன்படி விவரம் பின்வருமாறு :
சட்டமன்ற தொகுதியின் எண். மற்றும் பெயர்; |
27.10.2023 அன்றைய வாக்காளர்களின் விவரம் |
|||
ஆண்கள்; |
பெண்கள் |
இதர |
மொத்தம்
|
|
28. ஆலந்தூர் |
187615 |
192086 |
57 |
379758 |
29. திருப்பெரும்புதூர்(தனி) |
179657 |
189828 |
60 |
369545 |
36. உத்திரமேரூர் |
127960 |
137595 |
43 |
265598 |
37. காஞ்சிபுரம் |
149570 |
160088 |
22 |
309680 |
மொத்தம் |
644802 |
679597 |
182 |
1324581 |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்கள் மற்றும் வாக்கு சாவடி மையங்களில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல் / நீக்கல்/ திருத்தல் தொடர்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்
மேலும் 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023. 19.11.2023 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்
வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.