மேலும் அறிய

‘கோவைக்கு உதயநிதி போட்ட ஸ்கெட்ச் - வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்’ நேர்காணலில் நடந்தது இதுதான்..!

’டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகளை வாங்கிய டாக்டர் மகேந்திரனை தான் உதயசூரியன் சின்னத்தில் கோவையில் போட்டியிட வைக்கப்போகிறது திமுக’

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்துவிட்டு தன்னுடையை வேட்பாளர் பட்டியலையும் இறுதி செய்திருக்கிறது திமுக. நாளை (புதன்கிழமை) வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், திமுக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வார் ரூம் அமைத்து கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட கோவை தொகுதியை அவர்களிடமிருந்து பெற்று நேரடியாக திமுகவே அங்கு களமிறங்குவதுதான் களத்தில் சுவாரஸ்சியத்தை எகிற செய்துள்ளது.‘கோவைக்கு உதயநிதி போட்ட ஸ்கெட்ச் -  வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்’ நேர்காணலில் நடந்தது இதுதான்..!

ஆட்சியை பிடித்தும் கோவையை கோட்டை விட்ட திமுக

கடந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. கோவை மாவட்டம் எப்போதும் அதிமுக கோட்டை என்பது நிரூபணம் செய்யும்விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் கூறி வந்தனர். இந்த பேச்சை தவிடுபொடியாக்க திமுக நினைத்தது. அதனால் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணியை மாற்றிவிட்டு செந்தில்பாலாஜியை பொறுப்பு அமைச்சராக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை காட்டிலும் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ‘கோவைக்கு உதயநிதி போட்ட ஸ்கெட்ச் -  வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்’ நேர்காணலில் நடந்தது இதுதான்..!

கோவையை திமுக கோட்டையாக்குவேன் – சூளுரைத்த உதயநிதி 

உள்ளாட்சி தேர்தலை கடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் திமுகவே போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தார் உதயநிதி ஸ்டாலின். அதற்காக மார்க்சிஸ்ட் கட்சியிடமிருந்து கோவையை பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  செந்தில்பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், மேற்கு மண்டலத்திற்கான பொறுப்பை நேரடியாக தன் வசம் எடுத்துக்கொண்டார் உதயநிதி. கோவையில் திமுக வேட்பாளரை நிறுத்தி அவரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைத்து அந்த மாவட்டத்தை திமுக கோட்டையாக்க வேண்டும் என்று சூளுரைத்திருக்கிறார் அவர்.

கோவை திமுக வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்
கோவை திமுக வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்

 ’உதயநிதியின் சாய்ஸ் டாக்டர் மகேந்திரன் – முதல்வரின் விருப்பமும் அதுதான்’

அதற்காக அவர் தேர்வு செய்ய நினைத்த நபர் டாக்டர் மகேந்திரன். முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணமும் அதுவாகதான் இருந்தது. அதற்கு காரணமும் உண்டு. மக்கள் நீதி மய்யம் 2019ல் சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் புதிய சின்னமான ’டார்ச்லைட்’ சின்னத்தில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு, ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கி திமுக, அதிமுக என தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளையெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்க செய்வதவர் டாக்டர் மகேந்திரன். அப்போதே, அவருக்கான கிராஃப் எகிறிவிட்டிருந்தது. பல கட்சிகள் அவருக்கு தூண்டில் போட்டன. ஆனால், அவர் தொடர்ந்து கமல்ஹாசனுடன் பயணித்தார்.‘கோவைக்கு உதயநிதி போட்ட ஸ்கெட்ச் -  வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்’ நேர்காணலில் நடந்தது இதுதான்..!

 திமுக-வில் இணைந்த டாக்டர் மகேந்திரன் – உறுதி கொடுத்த மு.க.ஸ்டாலின்

ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் மகேந்திரன். கமல்ஹாசனை பிரிந்து வந்துபிறகு அவர் அளித்த நேர்காணலில் கண்கலங்கினார் மகேந்திரன். எல்லா வகையிலும் தன்னை நன்றாக பயன்படுத்திவிட்டு ஓரங்கட்ட நினைப்பதாக சொல்லி உருகினார். அவர் திமுகவில் சேர்ந்தபோதே கோவை தொகுதி உங்களுக்குதான் என்று உறுதி கொடுத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த உறுதியை இப்போது நிறைவேற்றப்போகிறார்.

நேர்காணலில் மகேந்திரன் சொன்ன ஒத்த வார்த்தை – சிரித்தபடியே டிக் அடித்த முதல்வர்

கோவை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துவிட்டு நேர்காணலில் பங்கேற்றார் மகேந்திரன். உங்களுக்கு எதற்கு கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் ? என்று தமாஷாக முதல்வர் கேட்க, எனக்கு வாய்ப்பு கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், இந்த முறையாவது கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்காமல், திமுக போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். நீங்கள் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவரோடு தோளுக்கு தோளாக நின்று பணியாற்ற நான் தயார் என்று சொல்லியிருக்கிறார் மகேந்திரன். மற்றவர்களின் பதிலும் மகேந்திரனின் பதிலுக்குமான வித்தியாசத்தை கண்டுகொண்ட பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்ணை காட்ட, அந்த இடத்திலேயே மகேந்திரன் – தான் வேட்பாளர் என்பதை முடிவு செய்துவிட்டார் மு.க.ஸ்டாலின்.‘கோவைக்கு உதயநிதி போட்ட ஸ்கெட்ச் -  வேட்பாளராகும் டாக்டர் மகேந்திரன்’ நேர்காணலில் நடந்தது இதுதான்..!

போட்டி உறுதி – நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்

 1996ல் ராமநாதன் என்பவர் திமுக சார்பில் கோவை தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு பெரும்பாலும் கோவை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே திமுக ஒதுக்கியுள்ளது. இடையில், ஒருமுறை பாஜகவும், அதிமுகவுமே கோவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

பல ஆண்டுகள் கழித்து நேரடியாக கோவையில் திமுக போட்டியிடும் நிலையில், அங்கு வெற்றி பெற வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், டார்ச் லைட் சின்னத்திலேயே நின்று தனித்து போட்டியிட்டு கோவையில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கிய மகேந்திரனை வேட்பாளராக்கி கோவையை திமுக கோட்டையாக்க நினைக்கிறார்கள் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும்.

நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகயிருக்கும் நிலையில், கோவை தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் மகேந்திரன்-தான் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Embed widget