லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
அதன்பின் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் கைதி 2 திரைப்படத்தை இயக்க உள்ளார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதற்கு பிறகு கார்த்தி சர்தார் 2 மற்றும் கைதி 2 திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
கைதி 2 திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் கமல்ஹாசன் கைதி 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.