மேலும் அறிய

Ganapathy Rajkumar: அண்ணாமலை, அதிமுகவை எதிர்த்து மோதும் கணபதி ராஜ்குமார்? - கோவையில் திமுக வெற்றியை ருசிக்குமா?

Coimbatore DMK Candidate Ganapathi Rajkumar: கோவை தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதாலும், கட்டாய வெற்றியை நோக்கி திமுக, அதிமுக போட்டியிடுவதாலும் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ள திமுக, கடைசியாக 1996 ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1998 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் கமல்ஹாசன் மற்றும் சிபிஎம் கட்சிக்கு கோவை தொகுதியை திமுக விட்டுத்தராமல் நேரடியாக களமிறங்கியுள்ளது.

கோவை தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் பணிகளை செய்து வருகிறது. மேற்கு மண்டல பொறுப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கோவைக்கு பொறுப்பு அமைச்சர்களாக டிஆர்பி ராஜா மற்றும் முத்துசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோவை தொகுதியில் திமுகவில் பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலதிபரும், ஐடி விங்க் மாநில இணைச்செயலாளருமான மகேந்திரன் அல்லது திமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவராக உள்ள வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார்.

Ganapathy Rajkumar: அண்ணாமலை, அதிமுகவை எதிர்த்து மோதும் கணபதி ராஜ்குமார்? - கோவையில் திமுக வெற்றியை ருசிக்குமா?

அதிமுகவில் துவங்கிய அரசியல் பணி

59 வயதான கணபதி ராஜ்குமார், கணபதி பகுதியை சேர்ந்தவர்.  எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். அதிமுகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த கணபதி ராஜ்குமார், 3 முறை கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். இரண்டு முறை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக இருந்த இவர், 2014 ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார். எஸ்.பி. வேலுமணி ஆதரவாளராக இருந்த இவர், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.  பின்னர் எஸ்.பி. வேலுமணி உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சி பணிகளில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2020இல் திமுகவில் கணபதி ராஜ்குமார் சேர்ந்த நிலையில், அவருக்கு மாநகர மாவட்ட அவைத்தலைவர் பதவி தரப்பட்டது. திமுகவில் வேட்பாளராக பலர் போட்டியிட்ட நிலையில், மற்றவர்களை தவிர்த்து இந்த தேர்தலில் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைக்க செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவே காரணம் என கூறப்படுகிறது.

திமுக வேட்பாளராக அறிவிப்பு

செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக இருந்த இவர், திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என திமுகவினர் மட்டுமின்றி, கணபதி ராஜ்குமாரே எதிர்பார்க்கவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தனக்கு கொடுத்த வாய்ப்பினை, நன்கு பயன்படுத்திக்கொண்டு திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார்.

அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் ’ஐ அம் வெயிட்டிங்’ என சவால் விடுத்தார். ஆனால், திமுக வேட்பாளர் அண்ணாமலை பற்றியே பேசாமல் அமைதி காக்கிறார் என்று கூறப்பட்டாலும், பிரச்சாரத்தின்போது அவரது எதிர்ப்பை காட்டமாக தெரிவிப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Ganapathy Rajkumar: அண்ணாமலை, அதிமுகவை எதிர்த்து மோதும் கணபதி ராஜ்குமார்? - கோவையில் திமுக வெற்றியை ருசிக்குமா?

கோவையில் போட்டியிடும் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கும், கருத்துகளுக்கும் கணபதி ராஜ்குமார் கொடுக்கும் பதிலடி, கோவை தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவை வெற்றி பெறச் செய்யும் என்று அக்கட்சியின் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget