Arvind Kejriwal : பரிவோடு பேசிய பாகிஸ்தான் நாட்டு தலைவர்.. நோஸ் கட் செய்த கெஜ்ரிவால்.. நடந்தது என்ன?
வெறுப்பையும் தீவிரவாதத்தையும் அன்பும் அமைதியும் வெல்லட்டும் என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பதிவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்வினையாற்றியுள்ளார்.
வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பிணையில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வாக்கு செலுத்தினார்.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் போட்ட ட்வீட்: வாக்கு செலுத்தியதை தொடர்ந்து எஸ்க் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட கெஜ்ரிவால், "எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். அம்மா உடல்நிலை சரியில்லாததால் இன்று வரமுடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக வாக்களித்துள்ளேன்" என குறிப்பிட்டிருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த பதிவை மேற்கோள் காட்டிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சவுத்ரி, "அமைதியும் நல்லிணக்கமும் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்" என பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், "இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நம் நாட்டு உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக்கொள்ளாது.
நோஸ் கட் செய்த கெஜ்ரிவால்: நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள். உங்கள் ட்வீட் தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜகவின் முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜூ, "ராகுல் காந்திக்கு மட்டுமல்ல, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தானில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்று நான் உங்களிடம் முன்னரே கூறியுள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
चौधरी साहिब, मैं और मेरे देश के लोग अपने मसलों को संभालने में पूरी तरह सक्षम हैं। आपके ट्वीट की ज़रूरत नहीं है। इस वक़्त पाकिस्तान के हालात बहुत ख़राब हैं। आप अपने देश को सँभालिये https://t.co/P4Li3y2gDQ
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 25, 2024
பீகார், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.