மேலும் அறிய

Anbumani: செளமியா வென்றால் ஒட்டுமொத்த தர்மபுரியே முன்னேறும்: ஒரு முறை வாய்ப்பு கொடுங்க- அன்புமணி உருக்கம்!

தர்மபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால் தர்மபுரி தொகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த மாவட்டமே முன்னேறும்.  ஒரு நல்ல வேட்பாளருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்- தருமபுரியில் அன்புமணி உருக்கம்

தர்மபுரியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவை ஆதரித்து அன்புமணி இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தருமபுரி நகரதிற்குட்பட்ட மதிகோண்பாளையம், பால் டிப்போ, பெரியார் சிலை, அன்னசாகரம், அரசு மருத்துவ கல்லூரி, நெசவாளர் காலனி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை பகுதி மக்களை சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அன்புமணி,

’’ஒரு நல்ல வேட்பாளரை நாங்கள் உங்களுக்கு கொடுத்துள்ளோம். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் அங்கே சென்று குரல் கொடுக்கக் கூடியவர் சௌமியா அன்புமணி.

தர்மபுரி மாவட்டமே முன்னேறும்

இவரை உங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் தர்மபுரி மாவட்டமே முன்னேறும். தொழில் நிறுவனங்கள் எதுவும் இல்லாமல் தர்மபுரி மாவட்டம் பின்தங்கியுள்ளது. செளமியா அன்புமணி வெற்றி பெற்றதும் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்.

தர்மபுரி மாவட்டம் நீர் பாசன திட்டங்கள் இல்லை அதனை கொண்டு வருவார். தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர் பிரச்சனையை சரி செய்வார்.  மொரப்பூர் ரயில் திட்டம் விரைவாக செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்வார்.

நல்ல வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்

ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய நீங்கள் மாம்பழம் சங்கத்தில் வாக்களித்து சௌமியா அன்புமணியை வெற்றி பெறச் செய்யுங்கள்’’.

இவ்வாறு அன்புமணி பிரச்சாரம் செய்தார்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாதக என்று நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய்க்கு செல்லுமிடமெல்லாம் கூட்டம் திரளும் நிலையில், அவர் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

வீடியோ

செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Embed widget