மேலும் அறிய

ABP C Voter Opinion Poll: ஆந்திராவில் பாஜக பிரம்மாண்ட வெற்றி; தெலங்கானா, அஸ்ஸாம்மில் அதிர்ச்சியளிக்கும் சர்வே

ABP C Voter Opinion Poll: ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கோவா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ABP சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கோவா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எந்த கட்சிக்கு பலம் உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம்.

மக்களவை தேர்தல்:

இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  

ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

Also Read: ABP C Voter Opinion Poll: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் வேண்டாம் என 4.2 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்

ஆந்திர பிரதேசத்தில் மலரும் தாமரை

ஆந்திர பிரதேச மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 46.7 சதவிகித வாக்குகளையும், மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள YSR காங்கிரஸ் கட்சி 39.9 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 1.9 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதர கட்சிகள் 11.4 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என பார்க்கும்போது, மொத்தம் உள்ள 20 தொகுதிகளில், பாஜக  5 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா கட்சி ஆகியவை சேர்ந்து 15 தொகுதிகளிலும் என மொத்தமாக 20 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணியே கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தெலங்கானாவில் ஓங்கும் கை:

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி உள்ளது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 41.5 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 25.7 சதவிகித வாக்குகளையும், சந்திரசேகர் தலைமையிலா TRS ( BRS என மாற்றப்பட்டுள்ளது ) கட்சி 26. 7 சதவிகித வாக்குகளையும் AIMIM கட்சி 2.5 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 3.5 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. மற்றும் காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக 5 தொகுதிகளையும் TRS மற்றும் AIMIM தலா ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம்மில் மலரும் தாமரை

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி 51.8 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 35.5 சதவிகித வாக்குகளையும், AIUDF கூட்டணி 10.5 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 2.3 சதவிகித வாக்குகளையும் பெறும் என வாக்காளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில்  கணிக்கப்பட்டுள்ளது.  

அஸ்ஸாம் மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. பாஜக கட்சி 9 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சியான AGP மற்றும் UCCL  ஆகியவை 3 தொகுதிகளும் என மொத்தமாக NDA கூட்டணி 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றியை பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் கடும் போட்டி:

கோவா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி 46 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 44.9 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 9.1 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

கோவா மாநிலத்தில் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்து கணிப்பு முறை:

சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

கருத்து கணிப்பின் எண்ணிக்கை அளவானது 3% முதல் 5% மாறுபாடு இருக்கலாம் எனவும், 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget