மேலும் அறிய

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கை - விண்ணப்பிப்பது எப்படி?

விழுப்புரம் : அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10.05.2024 முதல் 07.06.2024 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் தெரிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

On the Job Training

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் On the Job Training ஆனது உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- ஐ விண்ணப்பதாரர் Debit card/ Credit Card / Net Banking/ UPI வாயிலாக செலுத்தலாம் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 07.06.2024. மேலும், விபரங்களுக்கு 9380114610, 8072217350, 9789695190 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget