மேலும் அறிய

UPSC Civil Services 2023: 1105 காலி இடங்கள்; யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!- விவரம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான 1105 காலி இடங்களுக்கு நடத்தப்படும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான 1105 காலி இடங்களுக்கு நடத்தப்படும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.

3 கட்டத் தேர்வு முறை 

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 தேர்வுகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பணி நிர்ணயம் செய்யப்படும். எனினும் 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் எனப் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன. 

UPSC Civil Services Prelims Exam 2023 Registration begins know how to apply Check Here UPSC Civil Services 2023: 1105 காலி இடங்கள்; யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; எப்படி?- விவரம்

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://upsconline.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அதில், One-time registration (OTR) for examinations of UPSC and online application என்ற பகுதியைத் தேர்வு செய்து, க்ளிக் செய்யவும். 

* முன்பதிவு செய்யாதவர்கள், புதிதாக விண்ணப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். 

* ஏற்கெனவே செய்துள்ளவர்கள், இ- மெயில், மொபைல் எண் அல்லது ஓடிஆர் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். 

* இதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 

பெண்களுக்குக் கட்டணம் இல்லை

அனைத்து தேர்வர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. 

அதிக காலி இடங்கள்

இந்த ஆண்டில் மட்டும் 1105 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த 7 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் ஆகும். 2022ஆம் ஆண்டில் 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் 712 காலிப் பணியிடங்கள் உண்டாகின.

2020ம் ஆண்டில் 796 காலிப் பணியிடங்களும், 2019ம் ஆண்டில் 896 காலிப்பணியிடங்களும், 2018ல் 782 காலிப் பணியிடங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன. கடைசியாக 2016ஆம் ஆண்டு 1209 காலி இடங்கள் நிரப்பப்பட்டன.

கூடுதல் விவரங்களுக்கு https://upsc.gov.in./sites/default/files/Notif-CSP-23-engl-010223.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
Embed widget