மேலும் அறிய

Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு

13 ஆண்டாக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

திமுக சட்டமன்ற தேர்தல்‌ வாக்குறுதி 181-ன்‌ படி பகுதிநேர ஆசிரியர்களின்‌ பணி நிரந்தரக்‌ கோரிக்கையை நிறைவேற்றக்கோரி உண்ணாநிலைப்‌ போராட்டம்‌ என்று பகுதிநேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.‌

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம், தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள்‌ சங்கம், தமிழக சிறப்பாசிரியர்கள்‌ சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள்‌ சங்கம் ஆகியவை இணைந்து பகுதிநேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளன. இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறி உள்ளதாவது:

’’அரசுப் பள்ளிகளில்‌ 15,169 பகுதி நேர ஆசிரியர்கள்‌ முறையான நியமனத்தில்‌ தமிழக மாணவர்களின்‌ பன்முக திறன்களை மேம்படுத்தும்‌ பொருட்டு உடற்கல்வி, கணினி, தையல்‌, இசை, ஓவியம்‌, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ ஆகிய பாடப்பிரிவுகளில்‌ ரூபாய்‌ 12,500/- தொகுப்பூதியத்தில்‌ பணியாற்றி வருகிறோம்‌.

13 கல்வியாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்த கோரிக்கை

13 கல்வியாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும்‌ போராட்டங்கள்‌ வாயிலாக வலியுறுத்தியும்‌ பணி நிரந்தரப்படுத்தப் படாமல்‌வாழ்வாதாரத்தை இழந்தும்‌ சமுதாயத்தில்‌ மதிப்பிழந்த போதிலும்‌ அரசுப் பள்ளி மாணவர்‌ நலன் கருதி பணியாற்றி வருகிறோம்.

எங்கள்‌ வேதனை அறிந்த கலைஞர் கருணாநிதியைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ‌ஸ்டாலினும் தேர்தல்‌ அறிக்கையில்‌ ( 2016 மற்றும்‌ 2021 ) பகுதி நேர ஆசிரியர்கள்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படுவார்கள்‌ என்று அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்‌ என்ற நம்பிக்கையுடன்‌ உள்ளோம்‌.

கடந்த காலங்களில்‌ வாழ்வாதார பணிநிரந்தர கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர்‌ மற்றும்‌ கல்வி அமைச்சரின்‌ கவனத்தை பெற கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்‌ மற்றும்‌ உண்ணாநிலைப்‌ போராட்டம்‌ நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயர்‌ அதிகாரிகளுடன்‌ பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும்,‌ நிதித்துறை ஒப்புதல்‌ இல்லை என்பதும்‌ 12,000-க்கும்‌ மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்‌ குடும்ப வாழ்வாதாரம்‌ காக்கும்‌ கோரிக்கை நிறைவேறாமல்‌ உள்ளதும்‌ எங்களுக்கு பெரும்‌ ஏமாற்றத்தையும்‌ வருத்தத்தையும்‌ அளிக்கிறது.

செப். 12 எழும்பூரில் உண்ணாரவிரதப் போராட்டம்

எனவே எங்கள்‌ கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின்‌ தலைநகர்‌ சென்னையில்‌ ராஜ ரத்தினம்‌ மைதானம்‌ அருகில்‌ பகுதி நேர ஆசிரியர்களின்‌ பணி நிரந்தர கோரிக்கையை வழியுறுத்தி செப்டம்பர்‌ 12-09-2024 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில்‌ 12,200/- பகுதிநேர ஆசிரியர்‌ குடும்பங்களுடன்‌ உண்ணாநிலை போராட்டம்‌ நடத்த உள்ளோம்‌. இதனால் முதல்வர்‌ மற்றும்‌ கல்வி அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்‌’’.

இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Embed widget