மேலும் அறிய

UGC NET : மீண்டும் வாய்ப்பு கொடுத்த யு.ஜி.சி! NET தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

UGC NET Exam December 2022 : நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு (UGC NET December 2022) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 17 ஆம் தேதி கடைசிநாளாக அறிவிப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை பதவேற்றம் செய்வதில் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்ததாக தெரிவித்திருந்தனர். விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுக்கு விண்ணப்பிக்க காவ அவகாசத்தை தேசியத் தேர்வுகள் முகமை 23 ஆம் தேதி (இன்று) மாலை 5 மணி வரை நீட்டித்தது.

இது தொடர்பாக அறிவிப்பு, தேரியத் தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், யு.ஜி.சி. தலைவர் ஜெகதிஷ் குமார் தனது டிவுட்டர் பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். 

யு.ஜி.சி. தேசிய அளவிலான தகுதித் தேர்வுகள் : 

நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற தகுதி பெறுவதற்கு தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.  இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை  தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA -National Testing Agency ) நடத்தப்படுகிறது. 

கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2022 டிசம்பர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது. நெட் தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  விண்ணப்பிக்க ஜனவரி 17 கடைசித் தேதி ஆக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் கடைசி நாளில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. பின்னர், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.  

தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

இதையும் படிங்க..

JEE Main 2023: ஜே.இ.இ. மெயின் 2023 ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்குவது எப்படி?- விவரம்

TNTET Model Exam: ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ஆம் தாள்: டிஆர்பி முக்கிய அறிவிப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget