மேலும் அறிய

TN TRB BEO: வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. 

முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம்  வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

மேலும் 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்கள்  3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஜூன் மாதம் வெளியான அறிவிப்பு

மே மாதம் முடிந்து ஜூன் தொடங்கிய பிறகும், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து,  தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து தேர்வர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான  தேர்வுக்கு விண்ணப்பித்தனர். நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இந்த நிலையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பம்

இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கூறும்போது, ‘’கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டிற்கான வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான https://www.trb.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் User id மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget