மேலும் அறிய

அரசு, தனியார் ஐடிஐ-களில் பயிற்சி வகுப்புகள்: 80% க்கு அதிகமானோருக்கு வேலை- எந்தெந்தப் படிப்புகளுக்கு?

அரசு, தனியார் ஐடிஐக்களில் பயிற்சி வகுப்புகளை தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ சி.வி. கணேசன்‌ துவக்கி வைத்தார்‌.

இத்தொழிற்பிரிவுகளில்‌ சென்ற ஆண்டில்‌ பயின்ற மாணவர்களில்‌ 80% க்கு அதிகமானோர்‌ பல முன்னணி நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்‌.

2024-ம்‌ ஆண்டில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கான பயிற்சி துவக்க விழா தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌திறன்‌ மேம்பாட்டு துறை அமைச்சர்‌ சி.வி.கணேசன்‌ தலைமையில்‌ அரசு தொழிற்பயிற்சி நிலையம்‌ அம்பத்தூரில்‌ நடைபெற்றது.

தமிழ்நாட்டில்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும்‌. 306 தனியார்‌தொழிற்பயிற்சி நிலையங்களும்‌ இயங்கி வருகின்றன. தொழிற்சாலைக்கு தேவையான திறன்‌ பெற்ற மனித வளத்தை தொடர்ந்துகிடைக்க செய்வதில்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ பெரும்பங்கு வகிக்கின்றன. இளைஞர்கள்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற்று நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்‌.

எந்தெந்தப் பிரிவுகளில் பயிற்சி?

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஃபிட்டர்‌, எலக்ட்ரீசியன்‌, மோட்டார்‌ வெகிக்கிள்‌ மெக்கானிக்‌, ரெஃப்ரிஜிரேசன்‌ மற்றும்‌ ஏர்கண்டிஷனிங்‌ மெக்கானிக்‌ போன்ற வேலை வாய்ப்புள்ள தொழிற்பிரிவுகளில்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படுவதோடு, மெடிக்கல்‌ எலக்ட்ரானிக்ஸ்‌, பவர்‌ - எலக்ட்ரானிக்ஸ்‌, ஸ்மார்ட்‌ போன்‌ ஆப்பரேட்டர்‌, பயர்‌ டெக்னாலாஜி, அட்வான்ஸ்டு மெஷின்‌ டூல்‌ போன்ற நவீன தொழில் பிரிவுகளிலும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர டாடா டெக்னாலஜிஸ்‌ நிறுவனத்துடன்‌ இணைந்து மேனுபேக்ஸரிங் ப்ராசஸ்‌ கண்ட்ரோல்‌ அண்ட்‌ ஆட்டோமேஷன்‌, இண்டஸ்டிரியல்‌ ரோபோடிக்ஸ்‌ அண்ட்‌ மிஜிட்டல்‌ மேனுபேக்ஸரிங் டெக்னிசியன்‌, அட்வாண்ஸ்டு சிஎன்சி மெஷினிங்‌ டெக்னிசியன்‌, பேசிக்‌ டிசைனர்‌ அண்ட்‌ விர்ச்சுவல்‌ வெரிபையர்‌, மெக்கானிக்‌ எலக்ட்ரிக்‌ இவெகிக்கிள்‌ ஆகிய தொழிற்பிரிவுகளில்‌ சென்ற ஆண்டு முதல்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

80% க்கு அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு

இத்தொழிற்பிரிவுகளில்‌ சென்ற ஆண்டில்‌ பயின்ற மாணவர்களில்‌ 80% க்கு அதிகமானோர்‌ பல முன்னணி நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்‌.

அரசு, தனியார் ஐடிஐ-களில் பயிற்சி வகுப்புகள்: 80% க்கு அதிகமானோருக்கு வேலை- எந்தெந்தப் படிப்புகளுக்கு?

தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு மற்றும்‌ தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்களிலும்‌ மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பயிற்சி வகுப்புகளை அமைச்சர்‌ கணேசன் துவக்கி வைத்தார்‌. மேலும்‌ புதிய மாணவர்களுக்கு துவக்க நாளன்றே விலையில்லா சீருடைகள்‌, விலையில்லா பாடப்புத்தகங்கள்‌, விலையில்லா வரைப்படக்கருவிகள்‌ மற்றும்‌ கட்டணமில்லாப் பேருந்து சலுகை அட்டைகள்‌ ஆகியவற்றை வழங்கினார்‌.

அரசு வழங்கும்‌ இத்தகைய நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி மாணவர்கள்‌மிகவும்‌ கவனமாக பயிற்சிபெற்று நல்லவேலை வாய்ப்புகளை பெற்று வாழ்வில்‌ வளம்‌ பெறவேண்டும்‌ என்று புதிய மாணவர்களை அமைச்சர்‌ வாழ்த்தினார்‌. மேலும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர்க்கையை அதிகரிக்கும்‌ பொருட்டு தயாரிக்கப்பட்ட குறும்படத்தையும்‌ அமைச்சர்‌ வெளியிட்டார்‌. அரசு தொழிற்பயிற்சி நிலையம்‌ அம்பத்தூரில்‌ ஹெச்சிஎல்‌பவுண்டேசன்‌ சமூக பங்களிப்பு நிதியின்‌ கீழ்‌ ரூ.1.25 கோடியில்‌ மேம்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தையும்‌ அமைச்சர்‌ திறந்து வைத்தார்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget