ஆசியாவின் டாப் 100 கல்வி நிறுவனங்கள்: இடம்பெற்ற தமிழ்நாட்டின் ஒரே கல்லூரி எது தெரியுமா.?
Top 100 Colleges List: சென்னை ஐஐடி கல்லூரியானது, ஆசியாவின் டாப் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
'க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025'-ல் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துப் பிரகாசிக்கிறது - முதல் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
க்யூ.எஸ் - ஆசியா 2025 தரவரிசை:
க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை - ஆசியா 2025 அறிக்கை என்பது ஆசிய கண்டம் முழுவதும் உள்ள உயர்கல்வியின் திறனைப் பிரதிபலிக்கிறது.
கல்வி, ஆராய்ச்சி, புதுமை, சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிறந்த நிறுவனங்களை இது பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தரவரிசை ஆசிய பல்கலைக்கழகங்களிடையே வளர்ந்து வரும் போட்டியையும் உலகளாவிய கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கான பிராந்தியத்தின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
டாப் 100 இடங்கள்:
க்யூஎஸ் உலக தரவரிசை - ஆசியா 2025ன் முதல் 50 முதல் இடங்களுக்குள் இந்தியாவின் 2 நிறுவனங்களும், முதல் 100 இடங்களில் முதல் இந்தியா ஏழு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தில் சீனாவில் உள்ள Peking University, China இடம் பெற்றுள்ளது.
தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ( Delhi IIT ) 44வது இடத்தில் உள்ளது, 48வது இடத்தில் IIT Bombay இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ஐஐடி மெட்ராஸ் (56) இடத்தில் இடம் பெற்றுள்ளது.
ஐஐடி காரக்பூர் (60), இந்திய அறிவியல் நிறுவனம் (62), ஐஐடி கான்பூர் (67), மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (81) உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் இந்தியாவின் வலுவான கல்வி நிலையை வெளிப்படுத்துகின்றன.
பெட்ரோலியம் - எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் (யுபிஇஎஸ்) இந்திய நிறுவனங்களிடையே மிக முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது 70 இடங்கள் முன்னேறி 148 வது இடத்தைப் பிடித்துள்ளது.
Video: AI வழக்கறிஞர் பதிலால் அதிர்ந்துபோன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி: வைரலாகும் வீடியோ.!
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக ஆசிய தரவரிசையின் முக்கிய அம்சங்கள்:
இந்த தரவரிசை கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 25 நாடுகளை உள்ளடக்கிய 984 நிறுவனங்களை மதிப்பிடுகிறது. 'க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025' என்பது, நிறுவன செயல்திறன் குறித்து செயல்திறன் ஒப்பீடுகளைச் செய்கிறது. சமீபத்திய தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுடன் இந்தியா தனித்து நிற்கிறது.
Also Read: சோப்பு, சானிடைசர் உள்ளிட்டவை தயாரிக்க தமிழ்நாடு அரசு பயிற்சி: பங்கேற்பது எப்படி?