மேலும் அறிய

TNSED App: பள்ளி மாணவர்களின் உடல் நலம் காக்க முக்கிய நடவடிக்கைகள்: கல்வித்துறை உத்தரவு

தேசிய சுகாதார இயக்கத்தின் அடிப்படை விவரங்கள்‌ திரட்டி‌ TNSED பள்ளி செயலியில்‌ விவரங்களைப்‌ பதிவிட வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின் மாநிலத்‌ திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்‌ கல்வி பள்ளி மாணவர்களின்‌ உடல்நலம்‌ பேணுதல்‌ தொடர்பாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய சுகாதார இயக்கத்தின் அடிப்படை விவரங்கள்‌ திரட்டி‌ TNSED பள்ளி செயலியில்‌ விவரங்களைப்‌ பதிவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தேசிய சுகாதார இயக்கம்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை இணைந்து, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயின்று வரும்‌ மாணவர்களுடைய உடல்‌ நலன்‌ சார்ந்த பிரச்சனைகளை இளம்‌ வயதிலேயே கண்டறிதல்‌ மற்றும்‌ தேவையான மருத்துவ பரிசோதனைகள்‌ உள்ளிட்ட தொடர்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள ஏதுவாக மாணவர்கள்‌ உடல்நலன்‌ சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ளும்பொருட்டு  செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகள்‌

பள்ளி மாணவர்கள்‌ உடல்‌ நலன்‌ சார்ந்த பிரச்சனைகளை இனம்‌ காணுதல்‌ மூலம்‌ பிறவிக்‌ குறைபாடுகள்‌, வளர்ச்சி குறைபாடுகள்‌, இரத்த சோகை, விட்டமின்‌ குறைபாடுகள்‌ போன்ற பல்வேறு உடல்நலக்‌ குறைபாடுகளுக்கு விரைந்து உரிய மருத்துவ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளவும்‌, மருத்துவ பரிசோதனையின்‌ அடிப்படையில்‌ தேவையான நேர்வுகளில்‌ மூக்கு கண்ணாடி போன்ற தகுந்த உபகரணங்கள்‌ வழங்கவும்‌ உரிய நேரத்தில்‌ தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ இவ்விவரங்கள்‌ அடிப்படையாக அமைகிறது.

இதன்பொருட்டு, வகுப்பு ஆசிரியர்கள்‌ TNSED School App Health and  Wellbeing செயலியில்‌ தங்களது EMIS அடையாள எண்‌ மற்றும்‌ கடவுச்‌ செல்லைப்‌ பயன்படுத்தி உள்நுழைந்து தங்கள்‌ வகுப்பிற்குரிய மாணவர்கள்‌ உடல்நலன்‌ சார்ந்த அடிப்படை வினாக்களுக்கு உரிய விவரங்கள்‌ பெற்று பதிவு செய்ய வேண்டும். 

வகுப்பாசிரியர்கள்‌ மூலம்‌ பதிவேற்றம்‌

வகுப்பு ஆசிரியர்கள்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌ விவரங்கள்‌ அடிப்படையில்‌ சிறப்புக் கவனம்‌,தொடர் நடவடிக்கை தேவைப்படும்‌ குழந்தைகளுக்கு மிக விரைவாக மருத்துவரின்‌ ஆய்வுப் பரிசோதனைகள்‌ திட்டமிடவும்‌ உரிய தொடர்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள இயலும்‌ என்பதால்‌ இப்பொருள்‌ சார்ந்து தனிக்கவனத்துடன்‌ செயல்பட்டு மிக விரைவாக அனைத்து மாணவர்களின்‌ உடல்நலன்‌ சார்ந்து சரியான முதல்‌ நிலை விவரங்களை மேற்கண்டுள்ள செயலியில்‌ வகுப்பாசிரியர்கள்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்திட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தொடர்புடைய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்க வேண்டும்.

கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி. இப்பணிகளை TNSED School App Health and  Wellbeing செயலியின்‌ மூலம்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

1. emis.tnschools.gov.in-ல் மூலம்‌ தலைமை ஆசிரியர்கள்‌ வகுப்பையும்‌ அதற்கான வகுப்பு ஆசிரியரையும்‌ தேர்வு செய்தல்‌ வேண்டும்‌.
2. சோதனை செய்யும்‌ வகுப்பு ஆசிரியர்கள்‌ other class screening module-ஐத் தேர்வு செய்து இப்பணியினை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.

3. மாணவர்களுடைய பெயர், வகுப்பு மற்றும்‌ பிரிவை ஆசிரியர்கள்‌ தேர்வு செய்தல்‌ வேண்டும்‌.
4. மாணவர்களிடம்‌ கேள்விகள்‌ கேட்டு அதை சரிபார்த்து செயலியில்‌ உள்ளீடு செய்தல்‌ வேண்டும்‌.
5. எடை பார்க்கும்‌ கருவி  மற்றும்‌ அளவை நாடா ஆகியவற்றின்‌ மூலம்‌ மாணவர்களின்‌ எடை மற்றும்‌ உயரத்தை கணக்கிடல்‌ வேண்டும்‌.
6. பதிவுகள்‌ மேற்கொண்ட பின்பு, திருத்தம்‌ செய்ய இயலாது.
7. ஆண்‌ ஆசிரியர்கள்‌ மாணவர்களையும்‌ பெண்‌ ஆசிரியர்கள்‌ மாணவியர்களையும்‌ மட்டுமே சோதனை செய்தல்‌ வேண்டும்‌''.

இ‌வ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின் மாநிலத்‌ திட்ட இயக்குநர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget