மேலும் அறிய

TNPSC TRB Exam: கட்டாயமில்லை; டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆஃபர் அளித்த அரசு

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வு, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த்தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வு, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த்தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துத் தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்‌ தகுதித்‌ தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து, ஆணை‌ வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

’’அரசுத்‌ துறைகளில்‌ உள்ள பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ தமிழக இளைஞர்கள்‌ பெருமளவில்‌ நியமனம்‌ பெற ஏதுவாக, மாநிலத்தின்‌ தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்துப்‌ போட்டித்‌ தேர்வுகளிலும்‌ தமிழ்மொழி தகுதித்தாள்‌ கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள்‌ வெளியிடப்பட்டன. அவ்வரசாணைக்கிணங்க, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்‌ தாளினை கட்டாயத்தாளாக இணைத்து, அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு, தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

செவித்திறன்‌ குறைபாடு உள்ளவர்களின்‌ பெற்றோர்‌ சங்கத்தின்‌ மனுவில்‌, காது கேளாத மற்றும்‌ வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள்‌, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக்‌ கற்க சிரமப்படுவார்கள்‌ என்றும்‌, இம்மாணவ மாணவியர்கள்‌ சிலர்‌ முன்பருவப் பள்ளி முதல்‌ பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக்‌ கல்வியில்‌ மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள்‌ எனத்‌ தெரிவித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படுகின்ற குரூப் 4 பதவிகளுக்கான போட்டித்‌ தேர்வில்‌ இத்தேர்வர்களுக்கு தமிழ்‌ மொழித்‌ தகுதித்‌ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்களுக்கென தனியாக பொது ஆங்கிலத் தாளினை நடத்தக் கோரியுள்ளனர்‌.

மேற்காணும்‌ கோரிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையுடன்‌ கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்‌ தேர்வினை எழுதுவதற்கு மாற்றுத்‌ திறனாளிகளுக்கு விலக்களித்து அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:

  • தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌ குரூப்  I,II, II-A ஆகிய இரண்டு நிலைகளைக்‌ கொண்ட தேர்வுகளில்‌, முதன்மை  எழுத்துத்தேர்வில்‌ கட்டாய தமிழ்மொழித்தாளானது, தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகளில்‌ கட்டாயத்‌ தமிழ்மொழி தகுதித்‌ தாளினை எழுதுவதிலிருந்து மாற்றுத்‌ திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌  III, IV, VII-B, VIII போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்தாளானது, தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில்‌, பள்ளி/ கல்லூரிகளில் ஆங்கில மொழிப்‌ பாடம்‌ மட்டுமே படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்‌ மொழித்தாள்‌ எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதில்‌ தரவரிசை மதிப்பீடு செய்வதற்காக, அவர்களுக்கென்று தனியாக பொது ஆங்கிலத்தேர்வு நடத்தப்படும்‌. (இத்தேர்வுகளில்‌ மொழி பெயர்ப்புப்பகுதி இடம்‌ பெறாது).
  • கட்டாய தமிழ்‌ மொழித்‌ தாளிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விலக்கு, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மட்டுமல்லாமல்‌, மாநிலத்தின்‌ மற்ற தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்து போட்டித்‌ தேர்வுகளுக்கும்‌ மற்றும்‌ நியமன அலுவலர்களால்‌ தேவைப்படும்‌ நேர்வுகளில்‌ நடத்தப்படும்‌ எழுத்துத்‌ தேர்வுகளுக்கும்‌ பொருந்தும்‌.


TNPSC TRB Exam: கட்டாயமில்லை; டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆஃபர் அளித்த அரசு

  • இவ்விலக்கு 40 சதவிதத்திற்கும்‌ குறைவான குறைபாடுகளைக்‌ கொண்ட மாற்றுத்‌ திறனாளிகளுக்கும்‌ பொருந்தும்‌.
  • இவ்விலக்கினைப் பெற விரும்பும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைச் சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌’’.

இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
Gold and silver rate today : திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..
திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..
பழைய கடனை அடைக்க புதிய கடனா? பேராபத்தில் சிக்க வைக்கும் கடன் பொறி! தெரிந்துகொள்ளுங்கள்..
பழைய கடனை அடைக்க புதிய கடனா? பேராபத்தில் சிக்க வைக்கும் கடன் பொறி! தெரிந்துகொள்ளுங்கள்..
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Embed widget